Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குரல்

இன்றைய நிலையில் தமிழ்மொழிக்கு, எது ஆக்கம் என்று சிந்திக்க வேண்டும். தமிழ் ஒருங்குறியில் (யூனிகோடு) 5 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று சேர்த்த பின்னரும், கிரந்த எழுத்துகள் எல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிற முயற்சி தமிழின் சிறப்புத் தன்மையை அழித்துவிடும் முயற்சியாகிவிடும். தமிழ்மொழிக்கு அறிஞர்கள் எதிர்பார்த்ததைவிட ஒரு மாபெரும் வளர்ச்சி கணினிமூலம் கிடைத்திருக்கிறது.

-பேராசிரியர் க.அன்பழகன்,
தமிழக நிதியமைச்சர்


தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.  ஏனென்றால், பணம் கொடுத்து, தங்களுக்குச் சாதகமான முடிவுகளை வெளியிடச் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.  சுதந்திரமான, நேர்மையான, தேர்தல் நடத்துவதற்கு கருத்துக் கணிப்புகள் இடையூறாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

-எஸ்.ஒய்.குரைஷி,
தலைமைத் தேர்தல் கமிஷனர்


நம்மவர்கள் இன்னும் நம்மையே மதிக்கவில்லை.  நம்மை நாம் மதித்து முன்மொழிவதற்கு ஆள் இல்லை. ஒருவர் இன்னொருவரைப் பார்த்து வியந்து பார்க்கிற அந்தக் கலாச்சாரமே இன்னும் வரவில்லை.  கலைமாமணி பட்டம் பெற்றாலே பக்கத்து வீட்டுக்காரனுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது.  பத்மசிறீ பட்டம் பெற்றால் பக்கவாதமே வந்து படுத்துவிடுகிறார்.  முதலில் நம்மிடமிருந்தே நாம் மீள வேண்டும்.  அப்போதுதான் தமிழை உலகத்திற்கு ஏற்றிச் செல்ல முடியும்.

– கவியரசு வைரமுத்து

 


அரசமைப்புச் சட்டமன்றத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய உரையை மாயாவதி படித்தே இருக்கமாட்டார் என்றும், அவ்வாறே, ஜவஹர்லால் நேரு அவர்கள் மாநில முதல் அமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்களை ராகுல் காந்தி பார்த்தே இருக்கமாட்டார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.   என்றாலும், இந்த அரசியல்வாதிகள்தான், இம்மனிதர்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுபவர்களாகக் கருதப்படுகின்றனர்.

– ராமச்சந்திர குகா,
வரலாற்றாளர்

 


ஒரு நாளில் 18 மணி நேரம் படிப்பேன்.  மொபைல் போனைப் புறக்கணித்தேன். நண்பர்களைத் தவிர்த்தேன்.  இதனால்தான் முதல் முயற்சியிலேயே வென்றேன்.  வாழ்க்கையின் எந்தத் தேர்விலும் வெற்றிபெற கடின உழைப்பு, ஈடுபாடு, நேர்மறை எண்ணம் ஆகிய மூன்று தோழர்கள் போதும்.

– ரம்ய பாரதி,
அய்.பி.எஸ் அதிகாரி