கே1: “இந்துத் தமிழர்’’ என்கிற அளவுக்கு தமிழ்த் தேசியம் சென்று-கொண்டிருக்-கிறதே! தங்கள் கருத்து என்ன?
– அ.பரமசிவம், வேலூர்
ப1: ‘முழுக்க நனைந்த பின் முக்காடு ஏதுக்கடி?’ என்ற பழைய கிராமியப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது _ மகா வெட்கம்!
கே2: உத்தரப்பிரதேச பாசிச வெறியாட்டத்-திற்குப் பிறகாவது இந்திய அளவில் விவசாயிகள், மானுடப் பற்றாளர்கள் ஒன்றுதிரண்டு போராடி உடனடித் தீர்வு காண முன்னெடுப்பு கட்டாயமல்லவா? அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிட வேண்டாமா?
– க.முருகேஸ்வரி, வியாசர்பாடி
ப2: தன்முனைப்பைத் தியாகம் செய்து, பொது எதிரி யார் என்பதைச் சரிவரப் புரிந்து லட்சிய உணர்வோடு செயல்-பட்டால் மட்டுமே அது முடியும்!
கே3: வரதட்சணை வாங்கினால், வழங்கப்-பட்ட பட்டம் ரத்து செய்யப்-படும் என்ற கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு சிறந்த வழிகாட்டல்தானே?
– தே.பெரியகருப்பன், மதுரை
ப3: அதோடு அபராதம், சிறைத் தண்டனையும் சேர்த்து வழங்கினால் நல்லது!
கே4: உத்தரப்பிரதேச கொடுந்தாக்குதலுக்குப் பின்னும் வாய்திறவா மோடி பச்சை பாசிஸ்ட் தானே?
– மகிழ், சென்னை
ப4: குற்றமிழைத்தவரைவிட, மவுனத் தவத்தால் அதற்கு ஆதரவு தருவோர் எவரும் மிகப் பெரிய குற்ற உடந்தையாளர் என்பது கிரிமினல் சட்டம் ஆகும்!
கே5: ஊராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்துவது கூடாது என்ற கருத்து சரியா?
– கோ.கன்னியப்பன், பொற்பந்தல்
ப5: எல்லோரும் கூடி ஒருமித்த முடிவுக்கு வந்தால் ஒழிய, இது சிறப்பாகச் செயல்பட முடியாது!
கே6: 2024இல் சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்க்கும் எடப்பாடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– தா.மீனாட்சிசுந்தரம், புதுக்கோட்டை
ப6: ‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது!
கே7: தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புப் பற்றி தங்கள் கருத்து என்ன?
– ச.செம்பருத்தி, திருச்சி
ப7: 11.10.2021 ‘விடுதலை’யில் எனது விளக்கமான அறிக்கையைப் படிக்கவும்.
கே8: இன்றைய இளைஞர்களுக்கு திராவிட இயக்கங்கள் பற்றிய புரிதலை உருவாக்க சிறப்புப் பயிற்சித் திட்டங்களை தி.க., தி.மு.க., ம.தி.மு.க., இணைந்து செய்தால் என்ன?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப8: தி.க.வின் அடிப்படையும் அணுகு-முறையும் தனித்தன்மையானது. எனவே, தனித்தனியே விளக்குவதுதான் நல்லது!
கே9: முற்பட்ட ஜாதியினர்க்கு 10% இட-ஒதுக்கீடு சரியல்ல என்று இப்போது உச்சநீதிமன்றத்தில் வலுவுடன் வாதிட்டால் என்ன?
– ப.காளிதாசன், மீனம்பாக்கம்
ப9: வழக்குகள் போடப்பட்டு 2 ஆண்டு-களாக நிலுவையில் உள்ளன. வலுவான வாதங்களை அப்போது விசாரணையில் வரும்.