Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : கருப்பு

ஆரியச் சூழ்ச்சியை அடித்து நொறுக்கும் கருப்பு

அறிவாசான் அய்யா பெரியார் உடுத்திய கருப்பு

காவிகளை கதறடிக்கும் கண்ணியக் கருப்பு

கல்விக் கொடியை நம் வீட்டில் ஏற்றிய கருப்பு

பார்ப்பனிய தாமரையை கருக்கிய கருப்பு

பாஜக ஆதிக்கம் அகற்றிய கருப்பு

பெண்ணுரிமை பெற்றிட முழங்கிடும் கருப்பு

பெருமையுடன் மணியம்மையார் உடுத்திய கருப்பு

மொட்டைப் பாப்பாத்தி இழிநிலை ஒழித்திட்ட கருப்பு

மொத்தமாக தேவதாசி முறையை நீக்கிட்ட கருப்பு

கருவறை நுழைவுக்கு களம் கண்ட கருப்பு

அனைத்து ஜாதியினரை அர்ச்சகராக்கிய கருப்பு

ஜாதி சனாதனம் ஒழிய சமர்புரியும் கருப்பு

ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்திட்ட கருப்பு

ஆயிரம் ஆயிரம் மனுவாதிகளை அடக்கிய கருப்பு

ஆரியத்தின் நச்சு வேரை அகற்றிய கருப்பு

திக்கெட்டும் தன்மானம் பரப்பிடும் கருப்பு

தீண்டாமையை ஒழித்திடவே போராடும் கருப்பு

சமூகநீதி காக்க சட்டம் திருத்திய கருப்பு

சமத்துவம் நிலைநாட்டி சாதித்த கருப்பு

தமிழர் தலைவர் வீரமணி தரித்திடும் கருப்பு

தடந்தோள் வீரம் தாங்கிடும் கருப்பு!

– தகடூர் தமிழ்ச்செல்வி