Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்ணுரிமை

நகையும் நட்டும்

நன்கு சுமந்து

செலவுக்குப் பணமும்

செலவிட உரிமையும்

பெற்று விடுவது

பெண்ணுரிமை அல்ல!

 

உயர்வான கல்வி

உடல்பலப் பயிற்சி

தற்காக்கும் தகுதி

தான்தேடும் பதவி

வருவாய் செலவிற்கு

வகையான உரிமை

துணையாய் வந்தவர்க்கு

இணையாகும் இணக்கம்

தற்சார்பு உடைய

முற்போக்கு வாழ்வு

 

பெறப்போகும் பிள்ளை

வரப்போகும் வாய்ப்பு

சிறப்பொடு செல்வம்

தரப்படும் மதிப்பு

முறைப்படி பெண்ணும்

முழுமையாய்ப் பெறுதல்

 

பெண்ணுரிமை யாகும்!

தன்னுரிமை யாகும்!

 

 

ஆணாதிக்கம்

“பூமித்தாய்’’

“கடல் அன்னை’’

“மலைமகள்’’

பெருமைப் படுத்துவதிலும்

பித்தலாட்டம்!

கீழேயுள்ள தெல்லாம்

பெண்!

“சூரியன்’’

“சந்திரன்’’

“சுக்கிரன்’’

உயரேயுள்ள தெல்லாம்

ஆண்!

– மஞ்சை வசந்தன்