¨ ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. _ மக்கள்- நலன் சார்ந்த இயக்கங்கள் இல்லை. அவை அநாகரிக அகோரிகளின் வன்முறைக் கும்பல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட தேவர் சமூகத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகி இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
¨ அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் தான் மிக மிக முக்கியமானது.
¨ “இந்து’’ என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன். 8 ஆண்டுகளாக தீவிரமாகப் பணி செய்தேன்.
¨ இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பாஜகவின் கொள்கையைப் பின்பற்றி வந்தேன்.
¨ ஆனால் எனது வீட்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்று இலட்சியத்தோடு இருந்த என் பிள்ளையின் கனவில் எனது கொள்கை நெருப்பை வைத்து எரித்து விட்டது.
¨ இட ஒதுக்கீட்டின் அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.
¨ எனது தலைமுறையில் முதல் பட்டதாரி ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டவர்களில் நானும் ஒருவன் என்று கூறியதும் கண்ணீர் விட்டார்.
¨ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்புகளை வளர்க்க எங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்தோம்.
¨ ஆனால் நம் மக்களின் நலன் சார்ந்த எந்தச் செயல் திட்டமும் அங்கே இல்லை.
¨ என் வீட்டில் பாதிப்பு வரும் போதுதான் நான் அதை உணருகிறேன்.
¨ இனிமேல் அங்கே இருந்தால் என்னை விட முட்டாள் வேறு யாரும் இல்லை எனக் கூறி வருந்தினார்.
¨ அவரது மனமாற்றத்தை வரவேற்கிறோம்.
மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். (அவை அநாகரிக அகோரிகளின், அதாவது நிர்வாண வன்முறைக் கும்பல். கும்பமேளாவில் அவர்களின் லட்சக்கணக்கில் சென்ற நிர்வாண ஊர்வலத்தை _ காட்டுமிராண்டித் தனத்தைக் கண்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
– – கி.பிரியாராம்