ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை

ஜனவரி 16-31, 2021

28.12.2020  –  தமிழ்நாடு அரசு நடத்தும் ‘கல்வி டி.வி.யில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் காட்டுவதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

28.12.2020 – எங்களது மனதின் குரலையும் மோடி கேட்க வேண்டும். டில்லியில் விவசாயிகள் ஓசை எழுப்பி போராட்டம்.

29.12.2020 – 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை. முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

29.12.2020 – சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த பா.ஜ.க. வேட்பாளர் – மங்களூரில் போக்சோ சட்டத்தில் கைது.

29.12.2020 – நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

29.12.2020 – 70 ஆண்டு சாதனையை மேயராக 21 வயது மாணவி பதவியேற்று முறியடித்தார்.

30.12.2020 – ராமன் கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் கொள்ளை!

30.12.2020 –  நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்குப் பரிசளித்த கணவர் – ராஜஸ்தானில் விசித்திரம்.

31.12.2020 – பரிகார பூஜை செய்வதாகக் கூறி பெண்ணைக் கொன்ற மந்திரவாதி வெள்ளக்கோவில் பகுதியில் நடந்த பயங்கரம்.

31.12.2020 – பட்டாசு தொழிற்சாலைகளுக்கு நலவாரியம்  –  தமிழக அரசு அரசாணை வெளியீடு.

31.12.2020  –  மதவெறிப் பிரச்சனை எழும்போது ஓட்டும், இடங்களும் முக்கியமல்ல – பினராயி விஜயன் பேச்சு.

1.1.2021 _ உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற கேரள சட்டமன்றம் தீர்மானம்.

2.1.2021 – பூர்வகுடியான பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளை மாற்றம் செய்ய பிரதமர் ஸ்காட் மொரிசன் முடிவு.

3.1.2021 – ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் டில்லியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

4.1.2021 – சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பொறுப்பேற்பு.

5.1.2021 – டில்லியில் தமிழ்மொழி, கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகடாமியை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

5.1.2021 – அய்.அய்.டி.யில் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு வேண்டாம் என்கிற கல்வி அமைச்சக முடிவுக்கு, சமூகநீதி மற்றும் மேம்பாடு அமைச்சகம் எதிர்ப்பு.

6.1.2021 – ரூ.56,000 கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனத்தை வெறும் ரூ.720 கோடிக்கு விற்க முயலும் மத்திய பா.ஜ.க அரசு!

6.1.2021 – மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். – முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

7.1.2021 – பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது, சி.பி.அய். அதிரடி நடவடிக்கை.

7.1.2021 – உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

8.1.2021  –  ஒடிசாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர இடஒதுக்கீடு அளிப்பது குறித்து உயர்நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

9.1.2021 –  முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு –  யாழ்ப்பாணத்தில் பதற்றம், மாணவர்கள் போராட்டம்.

10.1.2021 –  சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம்  – அகமண முறையை வளர்க்கும் கர்நாடக முதல்வர்.

11.1.2021 – சிவகங்கை அருகே கண்மாயில் கி.பி.12ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.

தொகுப்பு : மகிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *