புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகையும், மனிதநேயவாதியுமான ஆட்ரீ ஹெப்பர்னிடம் ‘அழகுக் குறிப்புகள்’ கேட்டபோது, ‘அழகு’ என்பதைப் பற்றி எழுதிய கவிதை. இதே கவிதை, அவரின் இறுதிச் சடங்கின்போதும் வாசிக்கப்பட்டது.
கவர்ச்சிகரமான இதழ்களுக்கு, கனிவான சொற்களைப் பேசுங்கள்,
விருப்பம்தரும் கண்களுக்கு, மனிதர்களில் உள்ள நல்லவைகளைக் காணுங்கள்,
மெலிந்த உடல்வாகிற்கு, உணவைப் பிற மக்களின் பசிக்கெனப் பகிருங்கள்,
அழகான கூந்தலுக்கு, தினமும் ஒரு குழந்தையை உங்கள் கூந்தலைக் கலைத்து விளையாட அனுமதியுங்கள்,
ஒயிலான நடைக்கு, ஒருபோதும் தனியே நடக்கலாகாது என்ற அறிவோடு நடங்கள்,
பொருட்கள் மட்டும் அல்ல, மக்களும், மீட்சி, புத்துயிர் பெறல், மாட்சி ஆகியன பெறத் தகுதியானவர்கள், எனவே எப்போதும் எவரையும் (மனதிலிருந்து) தூக்கி எறியாதிருங்கள்,
நினைவில் வையுங்கள், எப்போதாவது உதவும் கரம் தேவையென்றால், அது உங்களுடைய கரம் மட்டுமே (காலத்திற்கும் நம்பத்தகுந்தது) என,
வயது முதிர்கையிலே நீங்கள் அறிவீர்கள், உங்களுடைய ஒரு கரம் உங்களுக்காக உதவவும், அடுத்த கரம் மற்றவர்க்கு உதவவும் என.
ஆங்கிலத்தில் பதிவிட்டவர்: ஓசை செல்லா -அக்டேபர் 1, 2011 காலை 11:32 மணி
தமிழில்: கல்யாணசுந்தரம் சுப்பிரமணியன்– அக்டேபர் 6, 2011 இரவு 8:05 மணி
(20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் எடுக்கப்பட்ட படம்)
தேர்வுக்கு படிக்கும்போது தூங்காமல் இருப்பதற்காகவாம்!
மை மெட்ராஸ் 25.01.2011 காலை 10:06 மணி
பதிவிட்டவர்:
மரியானா ஆண்ட்டோ புருனோ
28.09.2011 இரவு 9:17 மணி
குடியினால், குடிப்பவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரும் பறிக்கப்படுகிறது….இப்படி நடப்பதால் தான் “குடி குடியைக் கெடுக்கும்” என்று மது பாட்டில்களில் எச்சரிக்கை அறிக்கை கொடுத்து விற்கிறார்கள்….. அது போலவே புகைப் பழக்கம்….சரி எனக்கு ஒன்று தோணுது…. இதுமாதிரி கடவுள் மற்றும் பக்தியினால் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்…எவ்வளவு உயிர்கள் கோவிலுக்குப் போகும்போது பாதியிலேயே போகிறது…….இப்படி நடப்பதற்கு, கோவில்களில் “பக்தி ஒழுக்கத்தைக் கெடுக்கும் சில நேரங்களில் உயிரைக் கூடப் பறிக்கும்” என்று ஒரு எச்சரிக்கை கொடுத்து பக்தி வியாபாரம் செய்தால் என்ன?
பரணீதரன் கலியபெருமாள் அக்டோபர் 01, 2011 மாலை 5:32 மணி
பல்லாவரத்தில் உள்ள அம்மன் கோவிலில்,அம்மன் தாலியை அறுத்துக்கிட்டுப் போய்ட்டாய்ங்களாம். அதிர்ச்சியடைந்த பூசாரி செந்தாமரை, அம்மனிடம் முறையிடாமல் பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தார். ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா, வேறு துணை யாரம்மா? ஆரியர் பகைவர் அசுரர் திராவிடர் அக்டோபர் 08, 2011 காலை 7:55 மணி
மானமும் அறிவும் ?
கோயிலுக்கு வெளியில்
தானம் கேட்பவன்
உன்னைச் “சாமி” என்கிறான்….
கோயிலுக்குள்
உன்னிடம் தானம் கேட்கும்
“அவனை”
நீயே சாமியென்கிறாய்……:
முருகானந்தம் சுப செப்டம்பர் 12, 2011 இரவு 11:02மணி
ஜெயா டிவியில் மாலையில் ஒளிப்பரப்பாகும் ராஜநேரம் நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு உண்மையில் அது ராகு நேரம் தான் போல. “நான் மரகதத்தில் மோதிரம் போட்டு இருக்கேங்க”. “எங்க அதை ஏன் மோதிரமா போட்டீங்க. நீங்க உங்க ராசிப்படி அதை செயின்னா போடணும். “அப்டிங்களா..” “ஆமா அதேபோல உங்களுக்கு ராகு ஆக்டிவ்ல இருக்கார். அதை டிஆக்டிவேட் பண்ணனும்..%$#%$#???…”
இதற்கு ராஜ் டிவியில் தேவயானி நடித்த கொடிமுல்லை சீரியல் எவ்வளவோ தேவல..
தமிழ் பொண்ணு செப்டம்பர் 20, 2011 இரவு 08:09 மணி
என்ன இருந்தாலும் தீபாவளியை மதவேற்றுமையின்றி கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருமே கொண்டாடுகிறார்கள்” என்று சமத்துவம்பேசும் இந்துத்துவ நண்பர்கள் யாராவது ரம்ஜான் நோம்பிருக்கிறார்களா? பக்ரீத் மற்றும் கிருஸ்துமத் கொண்டாடுகிறார்களா? ஏனிந்த சிறுபாண்மையினரை மதப் பண்டிகைகளுக்குள் அடக்கிவைக்கிற ‘தாராள’ முயற்சி?
மதம் சார்ந்த அனைத்துப் பண்டிகைகளையும் புறக்கணிப்போம்… மனிதனாக வாழ முயற்சிப்போம்.
பாரதிவாசன் அக்டோபர் 24, 2011 மதியம் 01:37 மணி
வாழ்க்கைத் தரம் உயர்ந்ததனாலே இதை நான் வாங்குறேன் –
விளம்பரத்தில் வரும் வாக்கியம்.
கொக்கி எப்படியெல்லாம் போடுறாய்ங்க…
TPKD செப்டம்பர் 25, பகல் 11:56 மணி
Leave a Reply