நூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019

நவம்பர் 16-30 2019

 

நூல்: ‘நேர்கொண்ட பார்வையும்

            எதிர்கொண்ட தேர்தலும் 2019’

ஆசிரியர்: முனைவர் அ.ரசித்கான்

பக்கங்கள்: 350.    விலை: ரூ.300/-

வெளியீடு: ‘நூர்ஜஹான் பதிப்பகம்’,

எண்: 21/10, நல்லண்ண தெரு, ராயப்பேட்டை, சென்னை 600  014.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பணிகள் குறித்த தகவல்களின் தொகுப்பே இந்த நூல்.

தி.மு.கழகத்தின் இன்றைய தலைவர் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. பொருளாளராகப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் தொடங்கி, 2019 மக்களவைத் தேர்தலில் பெருவெற்றி குவித்த வரையிலான அவரது அரசியல் பயணத்தை விவரிக்கும் ஆதாரங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

தளபதி அவர்களின் உரைகள், நேர்காணல்கள், “உங்களில் ஒருவன்” என்னும் தலைப்பிலான மடல், அரசியல் சமூகம் சார்ந்த அறிக்கைகள் போன்றவற்றைத் தொகுத்து தந்துள்ளதுடன், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின்  நடவடிக்கைகள் குறித்து தளபதி தெரிவித்த கருத்துகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் எப்படி எல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியால் உருவாக்கப்படுகின்றன என்பதையும், அதை தடுப்பது பற்றியும் ஊடகவியலாளர்களுக்கு தளபதி தெரிவித்த கருத்துகள் ஆவணங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் பற்றிய பல்வேறு அச்சு ஊடகங்கள் எழுதிய முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தளபதி அவர்களின் மகளிர் திட்டங்கள் குறித்த தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

– வை.கலையரசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *