வள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது என்ற தலைப்பிலான என்றும் அணையாத அறிவு தீபம் பெரியவர் பெரியாரின் சொற்பொழிவுக் கட்டுரை படித்தேன்.
இலக்கிய மேதைகள் என்றும், இலக்கிய சாம்ராட்டுகள் என்றும், இலக்கியப் பேராசான்கள் என்றும், சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தமிழ் இலக்கியங்களில் ஏதோ உலகத்திலேயே இல்லாத அதிசயங்கள் இருப்பதாகவும் இதைப் படிக்காதவர்கள் ஏற்றம் பெற முடியாது என்றும், இந்த இலக்கிய நூல்களையும் நூலாசிரியர்களையும், இந்த மேதைகள் வாய் நோக வயிறு வலிக்கப் புகழாத நாளே கிடையாது.
இந்தப் புகழ் பரப்பில் மயங்கிய நானும் நூலகம் சென்று ஒன்றிரண்டு இலக்கிய நூல்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்குள் அந்த உண்மையான கருத்து ஞாபகத்துக்கு வந்தது. திருக்குறளைத் தவிர மற்றனைத்து இலக்கியங்களும் குப்பைகள், விபச்சார விரிவுரைகள், வெட்டிப் புலம்பல்கள். இவை உண்மையில் ஒளிக்காமல் பகுத்தறிவு வெளிச்சத்தில் என்றும் உண்மையாகவே எல்லோரும் படிக்க – பயன்பெற நேர்நடையில் வெளிவரும் உண்மை இதழுக்கும் அதன் நிருவாகத்தினருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சி நிறைந்த நன்றி, நன்றி, நன்றி.
– இயற்கைதாசன், கொட்டாகுளம்
தந்தை பெரியார் 133ஆவது பிறந்தநாள் இதழாக ஜொலித்த அனைத்துச் செய்திகளும் அருமை! குறிப்பாக, பெரியார் வாழ்வின் சுவையான நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் வெளிவந்த துணுக்குகள் ஒவ்வொன்றும் நான் ஏற்கெனவே படித்திருந்தாலும், இன்னும் அச்செய்தி யினைப் படிக்கும்போது தேனாக இனித்தது.
அன்புடன் தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி உண்மை இதழில் 21ஆம் நூற்றாண்டு என்ற சிறுகதையினைப் படித்தேன். எனக்கு உடம்பெல்லாம் சிலிர்ப்பே வந்துவிட்டது. ஜோதிடத்தை நம்புபவர்களுக்கு நெத்தியடிக் கேள்வி! ஆசிரியருக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும். இப்படிக்கு,
-மானமிகு சு. கோபாலகிருஷ்ணன், கீழப்பாவூர்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் சிந்தனைத் துளிகள் அருமை.
புதுப்பாக்கள் பகுதியில்,
‘புதிய வாகனம்
‘முதல் விபத்து
எலுமிச்சை என்ற கவிதை அருமை.
– க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
1956–இல் அய்யா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் உள்ள உண்மை நிலையினைக் கண்டுணர்ந்தேன். மறு பதிப்பிற்கு எனது இதயப்பூர்வமான நன்றி.
நாதஸ்வர வித்வான் திருமிகு. பொன்னுசாமிப் பிள்ளை அவர்களின் சுயமரியாதைச் சீற்றம் கண்டு சிலிர்த்தேன். அதனைப் படித்திடும் அனைவரின் உள்ளங்களிலும் சுயமரியாதைத் தீ தொற்றியிருக்கும் என நம்புகிறேன்.
– அழகரசன், சென்னை – 42
Leave a Reply