மீனுக்கு தங்கச் சிலை
19ஆம் நூற்றாண்டில், ரஷ்யாவில் மலேரியா நோய் வேகமாக பரவி, பல உயிர்களைப் பலி கொண்டது. மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தாலும், சிலர் மலேரியா கொசுக்களை அழிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினர். அப்போது ‘கம்பெசி’ என்னும் மீன் இனம், மலேரியா கொசு முட்டைகளைத் தேடி உண்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கம்பெசி மீன்களை அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, நீர்நிலைகளில் நீந்தவிட்டனர். அவை சில மாதங்களிலேயே மலேரியா கொசு முட்டைகளை முற்றிலுமாக அழித்துவிட்டன. மீன்களின் உயிர்காக்கும் பணியினைச் சிறப்பிக்கும் நோக்கில், கம்பெசி மீன் வடிவில் தங்கச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
******
குற்ற உணர்ச்சி ஓவியம்
துருக்கி ஓவியர் ஒருவர், பெண்கள் அணியும் ‘ஹை_ஹீல்ஸ்’ காலணிகளைக் கொண்டு ‘குற்ற உணர்ச்சி ஓவியம்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். 440 ஜோடி காலணிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியம், காதலர்கள் மற்றும் கணவர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. நகரின் மய்யப் பகுதியில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால், இது பலருக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார், ஓவியர்.
******
* கிரேக்க நாட்டு தேசியகீதம்தான் உலகின் மிக நீளமான தேசியகீதம் 128 வரிகள்.
* மின்சார ரயிலை இயக்க 16 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது.
******
* உலகின் அதிக வேகமாகச் செல்லும் கார் என்று கின்னஸ் சாதனை படைத்தது ஹென்னஸ்ஸி வெனோம் ஜிடி மாடல் காராகும். இதன் வேகம் மணிக்கு 434.52 கிலோ மீட்டராகும்.
* உலகிலேயே அதிகமான ஆண்டுகள் உயிர் வாழும் பெண்கள் உள்ள நாடு ஜப்பான். இங்கு பெண்களின் சராசரி வயது 82. ஆண்கள் அதிகமான ஆண்டுகள் உயிர்வாழும் நாடு அய்ஸ்லாந்து. சராசரி வயது 76.
******
* உலகிம் முழுவதும் எல்லா நாடுகளிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய ஒரே பிராணி நாய்.
* முதன்முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது.