அனுபவம் பேசுகிறது… கேளுங்கள்!

அக்டோபர் 16-31

உண்மையில் பேய் பூதம்னு எதுவுமே கிடையாது ராசா. என் தாத்தா ஒரு பிணத்தை எரிச்சிட்டு இருந்தார். உடம்பு ஒண்ணு எரியிறதை அப்பதன் முதல் தடவையாப் பாக்குறேன். தாத்தாவோட காலை இறுக்கமா கட்டிப் பிடிச்சிக்கிட்டு பயந்துகிட்டு நிக்கிறேன். கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருந்த பிணம் திடீர்னு எழுந்து உக்காந்து பாரு… நான் பயத்துல “பேய்…பேய்..னு அலரிட்டேன்.

ஆனா, தாத்தா சாதர்ணமாப் பிணத்தைக் கட்டையால அடிச்சுட்டுக் கிடத்திட்டு, ‘பேய்னு ஒண்ணு இருந்தா, நான் எப்படித் தினமும் வீட்டுக்கு உயிரோட திரும்ப வருவனே”னு சர்வசாதரணமாகக் கேட்டார். யோசித்துப் பார்த்தா’ ஆமால்ல’னு தோணுச்சு, அப்பவே எனக்கு பேய், பூதம் பயமும் விட்டுப்போச்சு. ஊரு ஆம்பளையாளுங்களே, பாருப்பா இந்தப் பொம்மனாட்டி என்னா தில்லா பயப்படாம இருக்கு’னு சொல்றப்போ பெருமையா இருக்கும்!.”

– அன்னம்மாள்

(மூன்று தலைமுறையாக பிணம் எரிக்கும் தொழிலைச் செய்து வரும் காஞ்சிபுரம் வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *