செய்திக்கூடை

அக்டோபர் 01-15
  • முல்லைப் பெரியாறு அணையில் பழைய அணையை அகற்றாமல் புதிய அணை கட்டுவதற்காக பெரியாறு மேம்பாட்டுத் கழகம் கேரளா என்ற பெயரில் நிறுவனம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
  • சந்திரனின் புவி ஈர்ப்புத்தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழுத் தகவல்களையும் அறிய உதவும் 2 செயற்கைக் கோள்கள் கேப் கானவரலில் உள்ள விமானப் படைத்தளத்திலிருந்து டெல்பா 2 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
  • வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 20 அன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • லிபிய அதிபர் கடாபியின் மகன் சாடி அல் கடாபி நைஜரில் தஞ்சம் அடைந்துள்ளதை நைஜர் நீதித்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • குஜராத் கலவர வழக்கில் முதல் அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் 63 அதிகாரிகளைச் சேர்ப்பது குறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.85512பி என்று பெயர் வைத்துள்ளனர்.
  • பாகிஸ்தானின் முதல் பெண் ராணுவ துணைத் தளபதியாக ஷாகிதா பக்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியினை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் அகிலன் கண்டுபிடித்துள்ளார்.
  • டென்மார்க் நாட்டின் முதல் பெண் பிரதமராக ஹெலெ தார்னிங் ஸ்க்மித் பொறுப்பேற்க உள்ளார்.
  • உலகின் மிகப் பெரிய வங்கியான சீனாவின் அய்.சி.பி.சி., இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் ஆரம்பித்துள்ளது.
  • ஆரஞ்சுப் பழத்தின் தோலில் இருந்து புதிய எரிபொருளை உருவாக்க முடியும் என்று அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் கிளார்க் கண்டுபிடித்துள்ளார்.
  • மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க எச்சரிக்கும் கருவியை சென்னை செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள் ளனர்.
  • இலங்கை அமைச்சராக இருப்பதால் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *