ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் ஒப்புதல். கொடியங்குளம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட இதேபோன்ற விசாரணைக்குழு காவல்துறையினரின் அந்தத் தாக்குதல் சரியானதுதான் என்ற முடிவை அறிவித்தது நினைவுக்கு வருகிறது.
(பரமக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகள் தொடர்பாக)
– குமரேசன் 13.09.2011 காலை 07:42 மணி
தமிழன் ஒன்னு சேர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுறான்.. சமச்சீர் கல்வி வேணும்னு அரசை எதிர்த்துப் போராடுறான்.. மரணதண்டனை வேணாம்னு இந்தியாவுக்கே பாடம் நடத்துறான்.. என்னாச்சு.. தமிழனுக்கு.., இப்படியெல்லாம் ஒற்றுமையா இருந்தா நம்ம ஆட்சிக்கு ஆகாதே.. பத்தவைங்கடா ஜாதித் தீயை.. தமிழனுக்குள்ள வெட்டிக்கிட்டுச் சாகட்டும். அப்பத்தான் நம்ம பக்கம் வர மாட்டானுங்க..
– கார்டூனிஸ்ட் பாலா 12.09.2011 இரவு 08:55 மணி
புத்தகங்கள் கோர்ட் படியேறி இறங்கிவர நாட்கள் ஆனதால், பாடங்களே சரிவர சொல்லித்தரவில்லை. அதற்குள் காலாண்டுத் தேர்வு. இதனால் பாதிப்பு தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கா?அல்லது பரிட்சைப் பேப்பரைத் திருத்தப்போகும் ஆசிரியர்களுக்கா?
– பிரதி பிரதிபா 23.09.2011 பகல் 08:24 மணி
மூவரின் தூக்குத் தேதி அறிவித்தபோது, தமிழுணர்வாளர்கள் எல்லாம் கொதித்தெழுந்தபோது, தூக்குக்கயிற்றின் நீளம், அகலம், தண்டனை நிறைவேற்றப்படும் விதம், எவ்வளவு நேரம் தூக்கு, எந்த நரம்பு, எலும்பு உடையும், என்றெல்லாம் எழுதி, எள்ளி நகையாடிய தினமலரே! உன்னுடைய காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன், நீதிபதியிடம் பேசியது குறித்து வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன்?
– ராஜேஷ் தீனா 10.09.2011 காலை 10.00 மணி
1600 கோடி ரூபாய்கள் செலவு செய்துவிட்ட பிறகு மூடச்சொல்லுவது ஏற்புடையதல்ல என்று சமூகப் பொருளாதார அறிஞர்களைப் போல கருத்துத் தெரிவிக்கும் தோழர்களே……இதைவிட அதிகம் செலவு செய்யப்பட்ட சேது கால்வாய்த் திட்டத்தை, கட்டுக்கதையின் கதாநாயகன் இராமன் பெயரைச் சொல்லி, நிறுத்தி வைத்துள்ளார்களே…அதைவிட லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக அணுமின் நிலையத்தை மூடுவது தவறல்ல.
– திராவிட புரட்சி 20.09.2011 காலை 11.44 மணி