‘நீமோ’
பள்ளிக் கூடத்துக்குச் செல்லும் சிறுவனுக்கு அம்மா கொடுத்தனுப்பும் ‘பாக்கெட் மணியை’ அவன் தனக்கென்று செலவழிக்காமல், ஒரு மீன் குட்டியை வாங்கி வளர்க்கிறான். அந்த மீனுக்கு தான் பார்க்கும் கார்ட்டூன் தொடரில் வரும் மீனின் பெயரான ‘நீமோ’ _ என்று பெயரையே வைத்து வளர்க்கிறான். ஒரு நாள் அந்த மீன் இறந்து போகிறது. சிறுவன், கசிந்துருகும் கண்ணீருடன், ‘நீந்து நீமோ’ _ என்று அழுதபடியே சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த மீன் இறந்ததற்கும் 2016, நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த ‘செல்லாக்காசு’ _ திட்டத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பதை அந்த அப்பாவி சிறுவன் அறியமாட்டான். செத்துப்போன ‘நீமோ’ _ மீனை நீந்த வைக்க அந்தச் சிறுவன் தாங்க முடியாத ஏமாற்றத்தோடு போராடிக் கொண்டிருக்கையில் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி இரண்டு கைகளையும் அகல விரித்து அடிவயிற்றில் பேசிக்கொண்டிருக்கிறார். காட்சி முடிந்து திரையில் இருள் கவிந்த பின்னரும் இயக்குநரின் ‘டச்’ பளிச்சிடுகிறது. வாழ்த்துகள்!
இக்குறும்படத்தை கார்த்திகேயன் எழுதி இயக்கியிருக்கிறார். இக்குறும்படம் 2018க்கான சிறந்த குறும்படம் மற்றும் சிறந்த குழந்தை நடிகர் என்ற பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இதே பெயரில் (NEMO) youtube—-இல் காணலாம்.
– உடுமலை