Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

’டெங்கு’ காய்ச்சல் தடுப்பும், சிகிச்சையும்

‘ஏடிஸ்’ என்கிற கொசு வகையால் பரவும் நோய் இது. இநத் வகைக் கொச, காலை நேரங்களில் மட்டுமே கடிக்கும்.

கொசுக்களின் பிறப்பிடம்:

நீண்டகாலமாக சுத்தப்படுத்தப்படாதத் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் சிரட்டைகள், குடம், வாளி, காலி டப்பாக்கள், டயர்கள், திறந்த நிலையில் இருக்கும நீர்நிலைகள். (இவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.)

அறிகுறிகள்:

உடல் வலி, தலைவலி, எலும்பு வலி, உடல் சேர்வு, தொடர்ச்சியான வாந்தி, தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், கடுமையான காய்ச்சல், கண்களுக்குப் பின்புறத்தில் வலி உள்ளிட்டவை வரும்.

தடுக்கும் முறை:

சுத்தமான பப்பாளி இலைச்சாறு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும. காய்ச்சல் அறிகுறி இருந்தால், தினமும் நிலவேம்பு கஷாயம் 10 மி.லி. குடிப்பதன் மூலம், டெங்குவிலிருந்து தப்பிக்கலாம். தவிர, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பரிசோதனை:

‘எலிசா’ என்னும் தட்டணுக்கள் பரிசோதனையின் மூலம், டெங்கு காய்ச்சலைக் கண்டறிய முடியும். காய்ச்சல் வந்த 2 நாட்களுக்குப் பின்னர்தான் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.