ஆசிரியர் பதில்கள்

பிப்ரவரி 1-15

தி.மு.க. தலைமையிலான ஆட்சி
அமைவது தான் ஒரே தீர்வு!

கே:    தமிழ்நாட்டில் கமல், ரஜினியின் அரசியல் வருகையை அதிகம் எதிர்நோக்குபவர்கள் யார்?
                   – – —தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப:        ‘இதுபோன்ற இன்னும் பிறக்காது, பெயர்வைக்காத பிள்ளைகளைப் பற்றிக் கேள்விகேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.

 

கே:    ஆண்டாள் மீது ஆரிய வெறியர்களுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம்?
            – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப:    ஆண்டாள் _ மீது ஏற்பட்ட பற்றல்ல. ஆன்மீக அரசியலுக்கு இப்படி ஒரு மூலதனம் கிடைத்ததே என்று ஒரு நப்பாசை அவ்வளவுதான்!

 

கே:    ‘2ஜி’ விவகாரத்தில் ஆ.ராசா அவர்களை ‘பலிகடா’ ஆக்கியது காங்கிரஸா? காங்கிரஸில் உள்ள ஆரியப் பார்ப்பனச் சக்திகளா?
    –         – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப:    பார்ப்பான் மேல் வருணமும், ஏகபோக முதலைகளான வர்க்கமும் (தொழிலதிபர்களின் Cartels பார்ப்பன மற்றும் வாக்கு வங்கி ஆதாயம் பெற திட்டமிட்ட ‘கொயபெல்சுகளும்’தான். இந்தச் சதியை உருவாக்கி, பொய்யை பெருமூலதனமாக்கி உயர நினைத்து வீழ்ந்து மூக்குடைபட்டவர்கள்!

 

கே:    எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியின் ஆட்சியில் இருக்கும் இவர்கள் எம்.ஜி.ஆர். படத்தைப் போடாமல் தமிழக அரசு நாள்காட்டியில் மோடியின் படத்தைப் போட்டிருப்பதைப் பற்றி தங்கள் கருத்து?
               –     -தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்
ப:    எம்.ஜி.ஆரா இப்போது ஆளுகிறார். மோடி அல்லவா தமிழ்நாட்டை ‘இவர்கள்’ மூலம் ஆளுகிறார். அந்த நன்றி விசுவாசம் காரணமாக இருக்கலாம்! மகா வெட்கக்கேடு!

 

கே:    இந்துக் கடவுள்களின் ஆபாசங்களை நாம் பேசாத அளவுக்கா வைரமுத்து பேசிவிட்டார்? புதிதாக இவர்கள் பொங்குவதன் உள்நோக்கம் என்ன?
       –          ——- கெ.நா.சாமி, சென்னை
ப:    ஊருக்கு இளைத்தவர் அவர்! மேலும் ‘ஓடுபவர்களைக் கண்டால் துரத்துபவர்களுக்கு ஏதா  லாபம்’ என்பது பழமொழியாயிற்றே!

 

கே:    ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் சட்டப்படி சரியா?
                             – அய்யா.கிருஷ்ணன், மதுராந்தகம்
ப:    திட்டமிட்டே செய்த ஜனநாயகப் படுகொலை அது; விதைத்தவர்கள் நிச்சயம் அறுவடை செய்தே தீரவேண்டியவர்கள்!

 

கே:    தொடர்ந்து மத்திய அரசால் பழிவாங்கப்படும் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் எப்படிக் கிடைக்கும்?    
–  சுஜித், தாம்பரம்
ப:        ஒரே வழி தி.மு.க. தலைமையிலான ஆட்சி மாற்றமே!

 

கே:    நம்மைப் புண்படுத்தும் இழிவுபடுத்தும் பூணூலை அகற்றும் வரை, சூத்திரன் என்று கூறும் சாத்திரங்களைத் தடை செய்யும் வரை நாம் எதிர்வினையாகப் போராட்டம் நடத்தினால் என்ன?
 – கா.ஆறுமுகம், வேலூர்
ப:    பொறுத்திருங்கள்; மேலும் நுனிக்கொம்பர் ஏறட்டும்; தமிழ்நாட்டு இளைஞர்கள் செயல்வீரர்களாக ஆகும் நிலை விரைந்து கொண்டிருக்கிறது என்பது புரியும்!

 

கே:    கண்ணனைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்குகிறவர்கள் சிற்றறிவு உடையவர்கள் என்று கண்ணன் கூறும் பகவத் கீதையை சைவர்கள் ஏன் தடை செய்ய வழக்குத் தொடரக் கூடாது?
             – வீ.சிவசுப்பிரமணியன், காஞ்சி
ப:    சைவர்களிடம் கேளுங்கள்! பதில் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *