தளபதி மு.க.ஸ்டாலின்: வரலாற்றுச் சிறப்புமிக்க தொரு தீர்ப்பு இன்றைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு போடப்பட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் இந்த 2ஜி வழக்கு. அந்தவகையில், இதை பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்குகளை எல்லாம் காட்டி இந்த வழக்கை திணித்தார்கள்.
அப்படிப்பட்ட இந்த வழக்கிலிருந்து, அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு டில்லியில் உள்ள தனி நீதிமன்றம்மூலம் கிடைத்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. எனவே, திமுகவைப் பொறுத்தவரையில் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்பதை தனி நீதிமன்றம் தெளிவாக தங்களது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், ஊடகத் துறையை சேர்ந்த உங்களை நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த வழக்கு போடப் பட்டபோது, இதை எந்தளவுக்கு மக்களிடையே பெரிதுபடுத்தி, கழகத்தின் மீது எவ்வளவு பெரிய களங்கத்தை சுமத்த வேண்டும் என்று எவ்வளவு ஆர்வத்தோடு இதில் கவனம் செலுத்தி னீர்களோ, இப்போது திமுக எந்தவித குற்றமும் செய்யவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பையும் மக்களிடத்தில் நீங்கள் ஆர்வத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும், உங்களுக்கு உள்ள அந்தக் கடமையை நீங்கள் ஆற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.