16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம். ஆதாரம் இதோ:
எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,25,191 பதிவானது 1,37,262 ஆக 12,071 கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வழக்கமாக 80% வாக்குகள்தான் பதிவாகும். ஆனால், இங்கு 110% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, 30% வாக்குகள் மோசடியாகப் போடப்பட்டுள்ளன என்பது வெளிப்படுகிறது. எனவே, இந்த 16 தொகுதிகளிலும் தேர்தலை இரத்து செய்து உடன் மறுதேர்தல் நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு நாடெங்கும் குரல் கொடுக்க வேண்டும்; நீதி கிடைக்கும்வரை போராட வேண்டும்.
குஜராத்தில் வெற்றி என்று கொக்கரித்த பி.ஜே.பி. பேர்வழிகள் இந்த மோசடிக்கு முகத்தை எங்கே வைப்பார்கள்! தேர்தல் கமிஷனும், நீதிமன்றங்களும் என்ன செய்யப் போகின்றன?
எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து இந்த மோசடியை முறியடித்து நீதியை நிலைநாட்டியே தீரவேண்டும்!