குட்டி ஜப்பானின் குழந்தைகள்
சிவகாசி நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் 90% வேலைவாய்ப்புத் தேவையை, அங்கு நடைபெறும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளுமே நிறைவேற்றி வைக்கின்றன. குறிப்பாக இதில் குழந்தைகள்தான் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். சுமார் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் பெண் குழந்தைகள்தான் அதிகம். நான்கு வயதிலிருந்து 16 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் இவர்கள். இதற்கு பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணங்களால் இந்த அவல நிலை நீடிக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
சுதந்திரம் பெற்ற பிறகான இந்தியாவின் நிலையைப் பாரீர் என்பது போல ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடன் வில்லுப்பாட்டு வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனமாதையம் தயாரிப்பில் சலாம் பெண்ணுர்கர் இயக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் 60 நிமிடம் ஓடுகிறது. பார்க்க வேண்டிய ஆவணப்பட வரிசையில் இதுவும் நிச்சயமாக இடம்பெற வேண்டும்.