நூல் : கல்வி நிலையங்களில் கலைஞர்
தொகுப்பாளர் : இள.புகழேந்தி
வெளியீடு : சீதை பதிப்பகம், 10/14,
தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி சென்னை-5.
பக்கங்கள் : 1400 (2 பாகங்கள்)
விலை : ரூ.1,200/_
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது மாணாக்கனாகி, இலக்கியம், அரசியல், கலையுலகம் என அனைத்துத் துறைகளிலும் காலூன்றி, அய்ந்து முறை தமிழக முதலமைச்சராய் விளங்கிய டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் நிகழ்வுகளில் 1951 முதல் 2010 வரையிலான 60 ஆண்டுகளில் பங்கேற்று ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
மாணவர்களும், இளைஞர்களும் படிக்க வேண்டிய நூல் இந்நூல். கலை, அறிவியல், இலக்கியம், மொழி, சமுதாயம், பொருளாதாரம் போன்ற துறைகளில் கலைஞர் அவர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது.