Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல் அறிமுகம்

தலைப்பு:  பெரியார் கொட்டிய போர் முரசு

தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல்,
84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 7.  

பக்கங்கள்: 172  நன்கொடை: 120/-

உலகில் மிக உயர்ந்த, முன்னேற்றக் கருத்துகளைக் கொண்ட மொழியாக தமிழ் விளங்கிட தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை அறிந்துகொள்ள பயன்படும் நூல். மதத்திலிருந்து மொழியைப் பிரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதனால்  மொழி வளர்ச்சியில் ஏற்படும் தடையையும் விளக்குகிறது.
ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த சமஸ்கிருத மொழியையும், சமஸ்கிருதத்தைப் புகுத்த இந்தி மொழியையும் நுழைக்கும் பார்ப்பனர் சூழ்ச்சியை விளக்கி தந்தை பெரியார் ஆற்றிய உரைகள்.

இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டியதன் அவசியம் இந்தித் திணிப்பால், பொதுப் போட்டியாக இல்லாமல் ஒரு சாராருக்கு ஏற்படும் நன்மைகள் ஒருதலைப்பட்சம் விளக்கப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் நிலை தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் உரிமைக்குப் பெரியாரும், திராவிடர் கழகமும் கொட்டிய போர்முரசு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட எழுச்சி மிக்கப் போராட்டங்கள் _ எழுத்துச் சீர்திருத்தம் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் _ அதன்பிறகு ஏற்பட்ட மறுமலர்ச்சி ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கும் விளக்கும் நூல்.