Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குறும்படம்

Blacksheep தயாரிப்பில் ‘A Period Film’’ என்ற தலைப்பில் நிஷிஜி வரியைக் கண்டித்து, ஒரு குறும்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூவர்ணக் கொடியைத் தாங்கி வரும் ஒரு பெண் (பாரத மாதா) வழியில் மாத விலக்குக்கான வலி ஏற்பட்டு, எதிரில் தெரியும் மருந்தகத்தில் சானிட்டரி நாப்கின் கேட்கிறார். கடைக்காரர், “இது புதிய இந்தியா; ஆகவே, கூடுதலாக வரி செலுத்த வேண்டும்’’ என்று கேட்கிறார்.

அதேசமயம் ஆணுறை கேட்டு வரும் ஒருவருக்கு, கொடுத்த காசில் ஒரு பகுதியை திருப்பிக்கொடுத்து Tax Free   என்கிறார் கடைக்காரர். அந்தப் பெண் திகைத்துப்போய் சானிட்டரி நாப்கின் வாங்காமல் சாலையோரம் கிடக்கும் சாம்பலை அள்ளுகிறாள்’’ என்பதுடன் இக்குறும்படம் முடிகிறது. தொடர்ந்துவரும் end tittle இல் இந்தியாவில் 88% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் துணி, சாம்பல், மண் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர் என்று அதிர்ச்சிகரமாக ஒரு தகவலைக் காட்டுகிறார் இக்குறும்படத்தின் இயக்குநர் டியூடு விக்கி. இரண்டே நிமிடத்தில் ஓடுகின்ற காட்சியாகப் பார்க்கும்பொழுது மனதைத் தொடுகிறது. அறிவைச் சுடுகிறது. மத்திய அரசின் தவறான போக்கை சுட்டிக்காட்டும் விதத்தில் இருக்கிறது.

இக்குறும்படத்தின் இணைப்பு: https://www.youtube.com/watch?V=g9BKAORWLBQ
                      

                                                                     – உடுமலை