அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல்லாக இருந்தால் ஹேக்கர்களால் மட்டுமில்லை வேறு யாராலும் யூகிக்க முடியாது.
கடவுச்சொல் தேர்வு செய்யும்போது உங்களது குழந்தைகள் பெயர், பிறந்த நாள் போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்கக் கூடாது.
நீண்ட கடவுச்சொல்லில் அதிக எழுத்துகள், இடையில் எண் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உங்களது கடவுச்சொல் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும். பல்வேறு தளங்களிலும் ஒரே கடவுச்சொல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத சேவைகளின் கணக்குகளை அழித்தல் அல்லது அதிலிருந்து விலகுதல் (DeActivate) செய்வது நல்லது.
– அரு.ராமநாதன்
Leave a Reply