Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஸ்மார்ட் போன்கள் சூடாவதைத் தவிர்க்க எளிமையான குறிப்புகள்!

ஸ்மார்ட் போன்களை அதனுடன் வழங்கப்படாத மின்னேற்றிகளால் மின்னேற்றம் செய்யும்போது மின்சாரம் சீரற்ற முறையில் செலுத்தப்படுவதால் சூடாவதோடு பல்வேறு இதர பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே, இதைத் தவிர்ப்பது நல்லது.

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளை சீராக புதுப்பித்துக் கொள்வதும், மேலும் பயன்படுத்தாத செயலிகள் பின்னணியில் இயங்குவதைத் தடுக்க அவற்றை கைப்பேசியிலிருந்து நீக்கிவிடுவது (Uninstall) நல்லது. இணையத்தை பயன்படுத்தாதபோது மொபைல் டேட்டாவை அணைத்துவிட வேண்டும். மேலும், இருப்பிடம், ஜிபிஎஸ், ப்ளூடூத், வைஃபை போன்ற வாய்ப்புகளையும் பயன்படுத்தாத நேரங்களில் அணைத்துவிட வேண்டும்.

இவ்வாறானஅம்சங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்-போது பேட்டரி சீக்கிரம் காலியாகி விடுவதோடு, திறன்பேசியின் வெப்பத்தை அதிகரித்து விடுகிறது.

– அரு.ராமநாதன்