“உண்மை’’ ஜூலை 1-_15 இதழில் வெளிவந்த உயர்திரு. நாரண.திருவிடச்செல்வன் அவர்களின், “ஜாதகம் பெண்களுக்குப் பாதகம்’’, ஒட்டுமொத்த மக்களின் அறியாமையால் மணவாழ்வின்றித் தவிக்கும் பெண்களின் நிலைபற்றித் தெளிவாக விளக்கியுள்ளது.
சமூக சீர்திருத்தத்தின் கண்களாக விளங்கும், ‘பிள்ளை வரம்’ ஆசிரியர் ஆறு.கலைச்செல்வன் அவர்களின் கதையின் உயிரோட்டங்கள் சிந்தனையைக் கவர்ந்தது.
‘பாதிக்கப்படப் போகிறோம்’ என அறிந்த மருமகள் (சாந்தி) புயலாக மாறி வதம் செய்த விதம் மிகவும் அருமை! ஒவ்வொரு மருமகளின் (குழந்தையில்லாமல்) வேதனைப்பட்ட மனதிற்கு மருந்து போட்டு புத்துணர்வை ஏற்படுத்திய இக்கதையின் ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள்!
ஜூலை 1-6_31 இதழில், திரு. ஆறு.கலைச்செல்வன் அவர்கள் எழுதிய “அறிவுத் தெளிவு’’ மாமியார்களாகப் போகும் சில பெண்களின் தெளிவற்ற அறிவை வெளிக் கொணர்ந்துள்ளார். இன்றைய சூழ்நிலையிலும் அதிகமான இடங்களில் முதலில் பெண் பார்க்கும் படலம். பின்பு, ஜோசியம் பார்க்கும் படலம். முரண்பாடான முடிவுகள். இதனால் எத்தனை பெண்களின் மனநிலை பாதிப்பிற்குள்ளாகின்றன என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.
– இரா.திலகம், பரங்கிப்பேட்டை
‘உண்மை’ இதழில், மானமிகு அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் தொடராக எழுதிவரும் ‘அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?’ எனும் கட்டுரை மிக அருமையாகவும், அறிவுக்கு தெளிவு ஏற்றும் வகையிலும் உள்ளது. எண்ணிலடங்கா ஆதாரங்களை அள்ளி அள்ளி வைக்கிறார்கள். கீதையின் மறுபக்கத்திற்கு மறுப்பளிக்காத ‘மேதாவிகள்’ இதற்காகவது மறுப்புக் கட்டுரை வெளியிடுவார்களா?
– பெரி.காளியப்பன், மதுரை
Leave a Reply