நலம் தரும் மருத்துவக் குறிப்பு

ஜூலை 16-31

நெல்லிக்காயைப் பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

* * *
இடுப்புச்சதை குறைய வேண்டுமா? அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

* * *
தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

* * *
பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் பெறும்.

* * *
தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* * *
மணத்தக்காளிக் கீரைச் சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.

* * *
ஓமத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *