பக்கவாத நிவர்த்திக்கு உதவும் ரோபோ கருவி

ஜூலை 01-15

தென்கொரியாவில் உள்ள உல்சன் தேசிய அறிவியல் நிறுவனம் (Ulson National Institute of Science)  பக்கவாத நோயை நிவர்த்தி செய்வதில் உதவக்கூடிய ஒரு ரோபோ கருவியைக் கண்டுபிடித்துள்ளது.

பக்கவாதம் தாக்கிய பின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. இந்தச் சாதனம் நோயால் தாக்கப்பட்ட முன் கையிலும், மணிக்கட்டிலும் உள்ள செயலற்ற தன்மையை 3 நிலைகளில் அளவிட்டு ஒரு சில நிமிடங்களிலேயே நிவாரணமளிக்கிறது.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முன்கை மற்றும் மணிக்கட்டுகளின் செயலற்ற, சோர்வடைந்த, விரைத்துப்போன நிலைமைகளை நுண்ணிய அளவில் கணிப்பதில் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்த ரோபோ கருவியின் சிகிச்சையால் பக்கவாதம் (stroke) தாக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உடலின் செயல்பாடுகளை அபிவிருத்திச் செய்து கொள்வதில் முன்னேற்றம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *