நிப்ட் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை தரமணியில் செயல்பட்டுவரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (நிப்ட்) கல்வி நிலையத்தில் பேஷன் பிட் அண்ட் ஸ்டைல், பேஷனல் ரீடெய்ல் ஸ்டோர் ஆபரேஷன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.
இந்தப் படிப்புகளில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை. ஃபேஷன் துறையில் 2 அல்லது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். படிப்புக் கட்டணம் ரூ.3 லட்சம்.
புட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன் டெக்னாலஜி, அப்பேரல் புரோடக்சன் அண்ட் மெர்கண்டைசிங் ஆகிய பாடப்பிரிவுகளில் ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஏதாவது பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். ஃபேஷன் துறையில் 2 அல்லது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். படிப்புக் கட்டணம் ரூ.1.5 லட்சம்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களின் தகுதி, நுழைவுத் தேர்வு, நேர்காணல், வேலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படிப்புகளில் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை தரமணியில் உள்ள நிப்ட் வளாகத்தில் ரூ.200 செலுத்தி விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புபவர்கள் NIFT என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்கப்பட்ட ரூ.300_க்கான டிமாண்ட் டிராப்ட்டை இணைத்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 4.8.2017
நுழைவுத் தேர்வு, நேர்காணல் நடைபெறும் தேதி: 18.8.2017
விவரங்களுக்கு: ww.nift.ac.in/chennai