கே : ‘தேசியம்’ என்பதற்குப் பொருளே, ‘பார்ப்பனியப் பாதுகாப்பு’ என்பது சரியா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : ஆம்; ஆமாம்; தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய உண்மை இது!
கே : அ.இ.அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்புவோர் யாரேனும் இருக்கிறார்களா?
– தி.பொ.சண்முகம், திட்டக்குடி
ப : ஆணவம் + அசட்டு தைரியம் + எவரையும் எடுத்தெறிந்து பேசுவது; எவரையும் பயன்படுத்தியவுடன் தூக்கி எறிந்து விடுவது (ஹிsமீ ணீஸீபீ tலீக்ஷீஷீஷ்), தனது தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பது போன்ற ‘கெமிஸ்ட்டிரி’ உடைய ஜெயலலிதாவின் இடத்தை எவரே நிரப்ப முடியும்?
கே : தமிழக அரசியல் தலைவர்களின் இன்றைய சமூக, மொழி, இன உணர்வு அரசியல் ஆதாயத்தின்பாற்பட்டதா? அல்லது சமூக அக்கறையின்பாற்பட்டதா?
– க.பாலசுந்தரம், திண்டிவனம்
ப : முதலில் அரசியல் ஆதாயம்; சிற்சில நேரங்களில் சமூக அக்கறை.
கே : வைரவிழா வெற்றியாக 17 கட்சிகள் ஒன்றிணைந்தன; தொடர்ந்து பீகாரிலும் மாயாவதி, அகிலேஷ் கலந்துகொள்ளும் லாலுவின் மாபெரும் மாநாடு. 2019இல் நாடாளுமன்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். காட்டாட்சி அகற்றப்படுமா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப : இது ஒரு நல்ல, தேவையான துவக்கம். மீண்டும் பாசீசம் நிரந்தரமாக ஆட்சி பீடத்தில் மகுடம் தரித்துக்-கொள்ளக் கூடாது அல்லவா!
கே : இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், பார்ப்பனர்களே தந்த புள்ளிவிவரப்படி, 5% மக்கள் தொகை கொண்ட ஆரிய பார்ப்பனர்கள் 50 முதல் 60 சதவீத உயர் பணியிடங்களை கைப்பற்றியுள்ளதால், சரியான சமூகநீதிக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப : வகுப்புவாரி உரிமையின் தேவையை வற்புறுத்தும் தங்கள் கேள்வியின் நியாயம், மிகவும் வரவேற்கத்தக்கது.
கே : “நாட்டைக் காவிகள் ஆளலாம். பாவிகள்தான் ஆளக்கூடாது’’ என்ற தமிழிசை சௌந்தர்ராஜனின் கருத்து சரியா?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப : ‘பாவிகளுக்குக் கூட இரக்க மனம் உண்டு. காவிகளுக்கு அறவே கிடையாது’ என்பது மாட்டுக்காக, ஓட்டுக்காக, மனிதனைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனம் _ கயமை அல்லவா?
கே : தலித் மக்களை இழிவுபடுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா?
– க.ஆறுமுகம், வந்தவாசி
ப : சட்டப்படி _ சோப் கொடுத்து குளிக்கச் சொல்வது, கை கொடுக்காமலிருக்க காவலர்கள்கள் கையைப் பிடித்துக்-கொள்ளும் காட்சிகள் அசிங்கத்தின் உச்சம்; சட்ட துஷ்பிரயோகம்.
கே : கலைஞரின் வைரவிழா “வயதானவர்-களின் விழா’’, என்ற பொன். இராதாகிருஷ்ணன் விமர்சனம் குறித்து தங்கள் கருத்து என்ன?
– மா.பெரியகருப்பன், மதுரை
ப : ‘சிறு பிள்ளைகள் விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்பதுதான் பழமொழி. ‘மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்’ என்பது முதுமொழி; வயிற்றெரிச்சல் வக்கனையாளர்களுக்கு இது புரியாததால், இத்தகைய உளறல். ஏ தாழ்ந்த தமிழகமே!
கே : மாட்டுக்கறித் தடையை எதிர்க்கும், தங்களுக்கும், ஸ்டாலின், இளங்கோவன் போன்றோருக்கும் பன்றிக்கறியை அனுப்பியுள்ள இந்துத்வாக் கூட்டத்தின் செயல்குறித்து தங்களின் கருத்து என்ன?
– தீ.முத்தமிழ், திருச்சி
ப : நாங்கள் ஏதோ பன்றிக்கறியை வெறுப்பவர்கள் அல்ல; எந்த உணவையும் சாப்பிடுவது அவரவர்க்-குள்ள உரிமை; அதைத் தடுப்பது பாசிசம்.
பெரியார் திடலில் அடிக்கடி மாட்டுக்கறி _ பன்றிக்கறி உணவு உண்டிருக்கிறோம்; அதை எந்த மதத்தினரும் (இஸ்லாமியர்) உட்பட எங்களுக்கு எதிராக, இந்து காவிக் காலிகளைப் போல கூச்சல், கொலைப்புற கோழைச் செயல்களைச் செய்ததில்லையே!