SMULE SING
வீட்டில், குளியலறையில் பாடியே தங்கள் திறமைகளைப் பலர் மூடி வைத்திருப்பர். திரைப்படப் பாடல்களை வரிவிடாமல், நல்ல குரலில், இசையோடு இயைந்து பாடும் பல திறமையாளர்களைப் பார்த்திருப்போம்.
இவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு தான் இந்த செயலி. உலகம் முழுக்க விறுவிறுவெனபெருகிவரும் ஸ்மூல் பாடகர்கள் உண்மையில் கலக்குகிறார்கள் என்றுதான் ணீசொல்ல வேண்டும்.
கரோக்கி எனப்படும் தொழில்நுட்பப்படி, பாடலின் பின்னணி இசை ஒலிக்க, வரிகள் உங்கள் செல்பேசித் திரையில் தோன்ற, நீங்கள் பாடிப் பதிவு செய்ய வேண்டியதுதான். அது ஸ்மூவில் பதிவாகி முகநூல், டுவிட்டர்களில் பரவிடும். ஜோடிப் பாடலா? உங்களைப் போலவே ஆர்வம் கொண்ட இன்னொரு நபர் பாடி வைத்திருப்பார்.
அதில் உங்கள் பகுதியை நீங்கள் பாடி மகிழலாம். உலகமே உங்கள் குரலைக் கேட்டுப் பாராட்டும். எழுதினால் ஏராளம் வரும் வசதிகள் உண்டு இந்தச் செயலியில்! பயன்’பாடு’ அதிகம்! பாடி மகிழுங்கள்!
– சமா