பா.ஜ.க ஆட்சியில் அய்ம்பத்தேழு பணக்காரர்களுக்கு மட்டுமே வளர்ச்சி!

மார்ச் 16-31

இந்தியாவின் அவலம் ஆதாரங்களுடன்

!

*   இந்தியாவில் 70 கோடி மக்களின் தினசரி வருவாய் வெறும் 33 ரூபாய் மட்டுமே!

*    ஆனால் இந்தியாவின் முதல் 10 பெரிய பணக்காரர்களின் வருவாய் ஆண்டுதோறும் 15% உயர்ந்து வருகிறது.

*    1% பணக்காரர்கள் இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 60% வைத்திருக்கிறார்கள்.
 
*    60 பணக்காரர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு, 90 கோடி இந்திய மக்களிடம் உள்ள சொத்து மதிப்புக்குச் சமம். அதாவது 90 பணக்காரர்களிடம் உள்ள சொத்து மதிப்பு 130 கோடி இந்திய மக்களின் சொத்து மதிப்புக்குச் சமம்.
 
*    இந்தியாவில் 84 பெரும் பணக்காரர்கள் (பில்லியனர்கள்) உள்ளனர். அவர்களிடம் உள்ள சொத்து மதிப்பு 16,69,288 கோடி ரூபாய்.
(ஆதாரம்: OXFam Wealth Report)
 
கருப்புப் பணம் முழுக்க பெரும் பணக்காரர்களிடமே உள்ளது. அதில் ஒரு ரூபாயைக்கூட மோடி அரசு கைப்பற்றவில்லை. மாறாக, ஏழைகளை, சிறு வியாபாரிகளைத்தான் கசக்கி, துன்புறுத்தி, அவர்களின் வாழ்வைப் பாழாக்கியுள்ளது.
 
மல்லையா போன்ற பெரும்பணக்காரர்கள் வாங்கிய லட்சக்கணக்கான கோடி வங்கிக் கடன் தொகையை, மோடி அரசு தள்ளுபடி செய்து, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது. ஏழைகள் பெற்ற கடனை மட்டும் கிட்டி போட்டு வசூலிக்கிறது! கார்ப்பரேட் முதலாளிகளின் கையாளாக மோடி அரசு செயல்படுகிறது.
இந்தி வாக்காளப் பெருமக்களே, பி.ஜே.பி.யை முழுமையாய் தேர்தலில் தோற்கடித்து, மதவெறிக் கூட்டத்தை மண் கவ்வச் செய்யுங்கள். மோடியின் மோசடி நாடகங்களை நம்பி ஏமாறாதீர்கள். விழிப்போடு இருந்து வீழ்த்துங்கள்! 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *