கே : நம் இயக்க ஏடுகளில் சில தலைவர்களின் பெயர்களை ஜாதியோடு குறிப்பிடுவது ஏன்?
– இ.ப.சீர்த்தி, சென்னை-18.
ப : அதைப் பிரித்தெடுத்தால் பெயர் புரியாது என்பதால். உதாரணம் ஜி.டி.நாயுடு அவர்களை ஜி.டி. என்றால் புரியாது. அதுபோல் ராஜகோபாலாச்சாரியாரை ராஜகோபால் என்றா போடமுடியும்?
கே : ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை சரியா?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி.
ப : மனுதர்மப் பார்வையோடு பார்த்தால் தவறுதான்? இல்லையா?
கே : புத்தர் முதல் அம்பேத்கர் வரை மாற்றுக் கொள்கையாளர்களை ஜீரணித்த ஆரியம் பெரியாரை மட்டும் நெருங்க முடியாமல் தவிப்பதேன்?
– சீர்காழி நா.இராமண்ணா, சென்னை.
ப : எரிமலையிடம் எவரே நெருங்க முடியும்?
கே : தந்தை பெரியார் – பிடல் காஸ்ட்ரோ ஒப்பிடலாமா?
– சீத்தாபதி, தாம்பரம்.
ப : எதிர்நீச்சலில் வெற்றிபெற்ற விடுதலை வீரர்கள்! புரட்சியின் உருவகங்கள்.
கே : “கருப்புப்பண நடவடிக்கையில் முதலைகள் வெளியேறிவிட்டன; மீன்கள் சாகின்றன!’’ என்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– க.ல.ராமு, உத்திரமேரூர்.
ப : பலே பலே முதலைகள் கொழுத்து, சிறு மீன்கள் சாகின்றன – சங்கடப்-படுகின்றன.
கே : இறக்கக் கூடாது என்பதற்குப் பிரார்த்தனை பொய்த்த பின்பும் மொட்டை போடுவது பக்தியா? அரசியலா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
ப : இரண்டும் இல்லை. முழு மூடத்தனத்தின் வெளிப்பாடு.
கே : தேசிய நதிநீர் ஆணையம் நதி நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், தள்ளிப் போட மோடி அரசு செய்யும் சூழ்ச்சிதானே?
– து.குமார், திருவள்ளூர்.
ப : ஆம்! இரட்டை ஆம்!
கே : செலாவணி நோட்டு செல்லாத அறிவிப்பில் வெனிசுலா வெற்றி பெற்றுள்ள நிலையில் மோடி அரசு தோற்றது ஏன்?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்.
ப : உண்மையான – யதார்த்தத்துடன் பிரச்சினையை வெனிசுலா அணுகியது; மோடியோ, அதை ஏதோ தனது சுயகவுரவப் பிரச்சினையாகப் பார்த்து, அவரது ஆர்.எஸ்.எஸ்.கூட தாக்கும் நிலையில் தவிக்கிறார்!
கே : செலாவணி இல்லா பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவில் சாத்தியமா?
– கெ.நா.சாமி, சென்னை-72.
ப : வங்கிக் கிளைகள், கிராமங்களில் பெருகி, ரொக்கமில்லா பண நடவடிக்கை பழக்கத்திற்கு இங்கு வருவது எளிதானதல்ல. முதலில் செய்ய வேண்டிய பூர்வாங்கப் பணி செய்யாது எப்படி எதிர்பார்க்க முடியும்? பல முன்னேற்பாடு, கட்டுமானம் – இவைகளை உருவாக்காமல், வெற்றி பெறுவது குதிரைக் கொம்பே! அ