1928ஆம் ஆண்டில் ஒரு அரசாங்க நிகழ்ச்சியில் பெரியார் உரையாற்றுகையில், என்னுடைய வாழ்நாளில் மந்திரியாக வேண்டும் என்றே ஆசைப்பட்டது கிடையாது. தப்பித்தவறி அப்படி ஒரு கெட்ட வாய்ப்பு எனக்கு ஏற்படுமேயானால், அரசாங்கத்தினுடைய நிதி முழுக்க நான் பெண் கல்விக்கே செலவழிப்பேன். ஒரு பெண்ணுக்கு நாம் கல்வி கொடுத்து-விட்டால், அது அந்தக் குடும்பத்திற்கே கொடுத்ததுபோலாகும். கல்வி, சமுதாய மாற்றத்திற்கு முதலாவது பெண் கல்விதான் அடிப்படையானது.
செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில்-கூட தீர்மானம் போடுகிறார்.
“ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் அத்தனை பேரையும் பெண்களையே நியமிக்க வேண்டும்’’ என்று. அதோடு, அந்த வாய்ப்பைக் கொடுத்ததோடு, இன்னொன்றையும் சொல்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணுக்கும் வேலைவாய்ப்பு. பெண்ணுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
“பெண்களுக்கு சமத்துவம் வரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’’ என்று பெரியாரிடம் கேட்டார்.
அய்யா அவர்கள் மிக இயல்பாக பதில் சொன்னார், “அதற்கு ஒரே வழி, ஆணுக்கு 50 சதவிகிதம் கொடுப்பதுபோல, பெண்களுக்கும் 50 சதவிகிதம் சமமாக இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்’’ என்றார்.