ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர்!

டிசம்பர் 01-15

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர்!

1944ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தமது உரையின் மூலம் அரசியல் பிரவேசம் செய்த திராவிடர் கழகத் தலைவர் மரியாதைக்குரிய திரு.கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி விழா மலர் வெளிவருவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சமூக ஊழியர், வழக்கறிஞர், எழுத்தாளர், 1956 முதல் தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர் என்ற பன்முகத் தன்மையோடு தனது அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர் திரு.வீரமணி அவர்கள். ‘விடுதலை’ நாளேட்டில் பணியாற்றி பின்னர் அதன் பொறுப்பாசிரியர், அதைத் தொடர்ந்து ஆசிரியர் என ஏற்றம் கண்டு அனைவரும் அன்போடு ‘ஆசிரியர் வீரமணி’ என அழைக்கும் நிரந்தர அடைமொழிக்குச் சொந்தக்காரர்.

 

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தை சீருடன் வழிநடத்தி அவரது கொள்கைகளை இந்திய தேசமெங்கும் மிகச் சிறப்பாகப் பரப்பிக் கொண்டிருப்பவர்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய திரு.வீரமணி அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

நன்றி!

இவண்,

 ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

நாள்:15.11.2016
 இடம்:சென்னை

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *