எதிராகச் செயல்படும் இரவிசங்கர்!
– சரவணா இராசேந்திரன்
வாழும் கலை என்ற முதலீடு இல்லாத நிறுவனத்தை நடத்திவருபவர் சிறீ சிறீ ரவிசங்கர். இவர் தன்னிடம் இருக்கும் கருப்புப் பணங்களை வெள்ளையாக்கும் முயற்சியாக வரலாற்றிலேயே முதல்முயற்சியாக கின்னஸ் சாதனை செய்யுமளவிற்கு உலக கலாச்சார விழா ஒன்றை நடத்த உள்ளார்.
இவர் இந்த விழாவை நடத்த தேர்ந்தெடுத்த இடம் டில்லியில் உள்ள யமுனா நதிப் பகுதி ஆகும்.
இந்த நிகழ்ச்சிக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வெறும் 27 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் டில்லி அரசு மற்றும் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சரவையில் அனுமதி வாங்கினர். ஆனால் 2016-ஜனவரி முதல் சுமார் 1000 ஏக்கர் பகுதிகளை ஆக்ரமித்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள், குடிசை வாழ்மக்கள் ஆகியோரை வெளியேற்றியதோடு கால்நடைகள் அனைத்தையும் விரட்டியடித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்காக குடிசைகள் எரிப்பு
நிகழ்ச்சி நடக்கவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடிசைப்பகுதி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, சுமார் 200 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குடிசைவாசிகள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். பணக்காரர்களுக்கு வாழக் கற்றுக் கொடுக்க, வாழும் ஏழைகள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களின் குடிசைகள் எரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் நிலத்தை ஆக்ரமிக்க சமூக விரோதிகள் இப்படி குடிசைகளை எரிப்பார்கள், ஆனால் இந்த ஆட்சியில் மூன்று நாள் நிகழ்சிக்காக குடிசைகளை பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள் திட்டமிட்டு எரிக்கின்றனர்.
எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டனர்
ஆரம்பத்தில் இதற்கு யமுனா நதியை வாழ வைப்போம் (லிவ் யமுனா) என்ற அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த அமைப்பின் மீது திடீரென வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்கள் என்று கூறி பொருளாதரக் குற்றப்பிரிவின் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
கார்பரேட் சாமியாரின் இந்த மோசடி குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த மனோஜ் மிஸ்ரா பேசும் போது, “3 நாட்கள் நடத்தும் நிகழ்சிக்காக சுமார் 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் தரைத்தளம் செயற்கையாக சமப்படுத்தப்பட்டுள்ளது, இங்கே தற்காலிக பிளாஸ்டிக் குடில்கள், மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பிளாஸ்டர் ஆப் பாரிசினால் செய்யப்பட்ட செயற்கை மலைகள் விலங்கு பொம்மைகள், மற்றும் செய்ற்கை தரைவிரிப்புகள் போன்றவை போர்க்கால அடிப்படையில் இங்கே தயராகி வருகின்றன. யமுனை ஆற்றை தூய்மை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளாக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 300 ஏக்கர் சதுப்பு நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள்ளேயே இவர்கள் இது போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் செயலைச் செய்கின்றனர். இதனால் டில்லியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும், யமுனை ஆற்றில் உயிரினங்கள் வாழத்தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் இப்பகுதியின் சுற்றுப்புறச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்று கூறினார்.
120 கோடி அபராதம்
இம்மாபெரும் சுற்றுப்புறச்சூழல் அழிப்பு மோசடி தொடர்பாக யமுனா பாதுகாப்பு அமைப்பு உட்பட 13 அமைப்புகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தன.
இவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. தங்களின் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள தாவது, வாழும் கலை அமைப்பு அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது, வெறும் 27 ஏக்கர் நிலத்தில் மட்டும் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறி, செயற்கையாக எந்த ஒரு அமைப்பையும் அங்கு ஏற்படுத்த மாட்டோம் என்றும், எளிதில் மக்காத எந்த ஒரு பொருளையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்திரவாதம் அளித்தது. ஆனால் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாழடிக்கப்பட்டுள்ளது, சுமார் 300 ஏக்கர் யமுனைப் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் கடண்ட 15 ஆண்டுகளாக பராமரித்து வருபவைகளாகும். மேலும் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும்சதுப்பு நிலம் என அனைத்தும் பாழடிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அழிவுகளை விரைவில் ஈடுகட்ட முடியாது என்றும், இதற்காக வாழும் கலை அமைப்பிற்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் கரைகளின் இருமருங்கிலும் உள்ள 45 முதல் 50 ஏக்கர் வெள்ளச் சமவெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இது வெள்ள காலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
காவல்துறை அனுமதி இல்லை
இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் அனுமதிபெறவில்லை. தீயணைப்புத் துறையினரின் அனுமதி பெறவில்லை.
வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் ஒரு நிகழ்சிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களின் பெயர் பட்டியல், எத்தனை நாள் இங்கே தங்குவார்கள், யார் யாரைச் சந்திப்பார்கள் போன்ற விபரங்களை வெளியுறவுத் துறைக்கு தரவேண்டும் என்பது விதி, ஆனால் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு விபரங்களும் சமர்பிக்க-வில்லை. வெளிநாட்டில் இருந்து பல தீவிரவாதிகள் இந்தியாவில் புகுந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் எந்த ஒரு விபரமும் இன்றி இந்தியாவில் நுழைந்து-கொண்டு இருக்கின்றனர். கார்ப்பரேட் சாமியார்களுக்காக இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளனர், மோடி தலைமையினார் ஆன காவிகளின் ஆரசு.
பாலம் கட்டும் இந்திய ராணுவம்
11ஆம் தேதி துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை விதிகளையும் மீறி யமுனா நிதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பாலங்க்ளை அமைக்கும் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகமான மக்கள் மிதக்கும் பாலத்தை பயன்படுத்தினால் விபத்து ஏற்படலாம் என்று ராணுவம் எச்சரித்த போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாலர்களின் வேண்டுகோள் படி மிதக்கும் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மோடி கலந்துகொள்வாரா?
இந்த நிகழ்விற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளதால் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்சி கலந்துகொள்ள மாட்டார் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் கூறிவிட்டது. இந்த நிலையில் இந்த மோசடிக்கூட்டம் நடத்தும் வியாபார நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்ளலாமா?
இது குறித்து சிதாராம் யச்சூரி பேசும் போது இந்திய நாட்டின் பாதுகாப்பு கடமையை மேற்கொண்டுள்ள ராணுவ வீரர்கள் பேரிடர் காலங்களில் மக்களுக்காக உழைக்க முன்வருவார்கள் ஆனால் சாமியார்ரவிசங்கர் விதிமுறைகளை கடுமையாக மீறியதுமல்லாமல் அரசின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தியுள்ளார் சட்டவிரோதமாக நிகழ்ச்சியை நடத்தும் சாமியாருக்கு வேலைசெய்ய இந்திய ராணுவத்தை அனுப்பியது யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், என்று கூறினார். காங்கிரஸ் கட்சியும் ராணுவத்தை அனுப்பிய விவகாரத்தில் கேள்வி எழுப்பியது.
ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் பேசும் போது சுற்றுப்புறச்சுழல் மாசுபடும், யமுனை நதியும் மாசாகும் என்பதால் பல்வேறு கடுமயான விதிகளை விதித்துள்ள சுற்றுப்-புறச்சூழல் அமைச்சகம், யமுனைக்கரையில் சுமார் 30 ஏக்கர் பகுதியில் வளர்த்துள்ள பசுமைத் தாவரங்களை அழித்த சாமியார் ரவிசங்கருக்கு ஏன் ராஜமரியாதை கொடுக்கிறது, நதிகளைப் பாதுகாப்பேன் என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் இந்த அரசு சாமியார் யமுனையை சீரழிப்பதை வேடிக்கை பார்த்துக்-கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் விளைவாய் நாடாளு-மன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இயற்கைக்கும், ஏழைகளுக்கும் எதிரான நிகழ்வை அனுமதிப்பதும், அதில் கலந்து கொள்வதும் மக்கள் எதிர் செயல் ஆகும்! ஸீ
சாமியார் சிறீ ரவிசங்கர் நடத்தும் வாழும் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு குறித்த தன்னார்வ அமைப்புகளின் மனுக்களை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் வாழும் கலை அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதமும், தனது பணிகளை ஒழுங்காக செய்யாத தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு ரூ.5 இலட்சம் அபராதமும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 1 இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் ‘மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டதை சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் பார்க்கையில் இது ஒரு பேரழிவு’ என்று கூறியுள்ளது.