கேள்வி : ஊடகத் துறையினர் அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களிடம் ஒருவிதமாகவும் மற்றவர்களிடம் ஒருவிதமாகவும் அணுகுவது குறித்தும் விஜயகாந்த் அதற்கு வெறுப்பை வெளிப்படுத்தியது குறித்தும் பண்பட்ட ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தங்கள் கருத்து என்ன?
– ம.தியாகராசன், வேலூர்
பதில் : வெறுப்பை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அதற்கேற்ற முறையில் அவரது தொண்டர்களும் சரி, இவரும் சரி (காறி உமிழ்வது போன்றவை) முறையற்ற செயலில் இறங்குவது சரியான தீர்வு அல்ல. எதையும் முறையோடு செய்தல் அவசியம்.
கேள்வி : திருமணமான தன் மகள் கள்ளக் காதலனுடன் சென்று விட்டதற்காக தனது மற்ற இரு பெண்களையும் தூக்கிட்டுக் கொன்று தானும் மனைவியுடன் தூக்கிட்டு அண்மையில் இறந்த முடிவு பற்றி தங்கள் கருத்தை வாழ்வியல் சிந்தனையில் எழுதுவீர்களா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : அவசியம் விரிவாக எழுதுவேன். பலவீனமான மனம் பற்றி தாராளமாக எழுதத்தான் வேண்டும்.
கேள்வி : அயல்நாட்டினருக்கு எடுத்துக்-காட்ட எத்தனையோ இருக்க, “கங்கா ஆரத்தி’’ போன்ற புராணக் குப்பைகளை மோடி காட்டுவது குறித்து தங்கள் கருத்து என்ன?
– நெய்வேலி க.தியாகராசன்
பதில் : பிதமர் மோடியை இப்போதாவது நாட்டு மக்களும் அறிஞர்களும் நடுநிலையாளர்களும் புரிந்துகொண்டால் நல்லது.
கேள்வி : மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்காத குற்றம் பி.ஜே.பி. அரசைப் போல, காங்கிரஸ் அரசும் செய்துள்ளது என்று கொள்ளலாமா?
– வி.தங்கமணி, சென்னை
பதில் : எந்தக் கட்சியானாலும் ஆட்சியினர் அதிகாரவர்க்கம் (ஙிuக்ஷீமீணீuநீக்ஷீணீநீஹ்) உயர்ஜாதியினர் ஆக இருப்பதன் விளைவே இது!
கேள்வி : பகுத்தறிவாளர் கழக அமைப்பு தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் உள்ளதா? இல்லையென்றால் அமைக்கும் அல்லது விரிவுபடுத்தும் திட்டம் உண்டா?
– சு.குணசேகரன், மதுராந்தகம்
பதில் : தென்மாநிலங்களிலும், மகாராஷ்டிரம், பீகார், பஞ்சாப் எல்லாம் உள்ளதே! அகில இந்திய மாநாடுகளில் கலந்துகொள்ளுபவர்கள் பட்டியலைப் பார்த்தால், உலக அளவிலும் ஏராளமான நாடுகளில் உள்ளனர்.
கேள்வி : அயல்நாட்டு எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்? சிறப்புக் காரணம் உண்டா? அண்மையில் தங்களைக் கவர்ந்த நூல் எது?
– வே.அன்பரசன், தஞ்சை
பதில் : இர்விங் வேலஸ் என்ற (மறைந்த) எழுத்தாளர் _ ஒவ்வொரு நாவலிலும், புதினத்திலும் ஒரு புதுமைக் கருத்தை இலட்சியப்படுத்தி எழுதுவார். பல நூல்கள் உண்டு. தனியே பட்டியல் தருவோம் பிறகு.
கேள்வி : பேரவைத் தலைவர் என்று அமர்ந்த பின்னும் கட்சி சார்பு மாறாமலும், பதவிக்குரிய ஆளுமையின்றியும் செயல்படுவது பற்றி தங்கள் கருத்து?
– நாத்திகர் சா.கோ., பெரம்பலூர்
பதில் 7: வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.
கேள்வி : ஜல்லிக்கட்டு நடத்துவதில் காட்டும் முனைப்பை அரசியல் கட்சிகள், இடஒதுக்கீட்டில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டிப்பதிலும், அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக வலியுறுத்துவதிலும் காட்டாத நிலையில், அனைத்துக் கட்சி மாநாட்டை விரைவில் நீங்களாவது கூட்டுவீர்களா?
– தீ.சண்முகம், நாமக்கல்
பதில் : நிச்சயம் செய்வோம்.
கேள்வி : நேரடியாக திராவிடர் கழகத்தில் ஈடுபடாத, பெரியார் பற்றாளர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைக்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் தொண்டர்களைப் பயன்படுத்தினால் என்ன?
– மூ.வேல்விழி, மதுரை
பதில் : நல்ல யோசனை _ அவசியம் செய்ய வேண்டும் _ செய்யலாம். ஸீ