செல்பேசியில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று பிரான்சின் லியோன் நகரில் இயங்கிவரும் அய்.நா. உலக சுகாதார அமைப்பின் பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.ஏ.ஆர்.சி) தெரிவித்துள்ளது.
செல்பேசிகளிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளின் மின்காந்தப் புலங்களால் ஒரு வகையான புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது; தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செல்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை; செல்பேசி அதிக நேரம் பேசுவதால் இது போன்ற நோய்கள் வரலாம் என்று 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்து கொண்ட மாநாட்டில் எச்சரித்துள்ளனர். பாதிப்பிலிருந்து விடுபட அதிக நேரம் செல்பேசியைக் காதில் வைத்துப் பேசாமல் ஸ்பீக்கர், ஹெட்போன்கள் மூலமாகப் பேசுவதும், குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) வழியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் நல்லது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Leave a Reply