நீதிமன்றக் கட்டணங்கள்: ஒவ்வொரு பிரதிவாதிக் காகவும், ரூ.50 நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வழிமுறை: பொதுநலவழக்குகளில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணை, இதர வழக்குகளைப் போலவே நடைபெறும். ஆனால், வழக்கு விசாரணை நடுவே நீதிபதி, குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதப்படுத்த (காற்று மாசு, குடிநீர் கெடுதல், மரங்களை வெட்டுதல், சாக்கடைப் பிரச்னை, கொசுத் தொல்லை, ஆற்றுநீரில் ரசாயனக் கலவை) என்ற பல புகார்களை நிருபிக்க ஒரு ஆய்வு அதிகாரியை நியமிக்க விரும்பினால் அவருக்கு அதற்கான அதிகாரம் உண்டு.
எதிர்மனுதாரரின் பதில்களைத் தாக்கல் செய்தபிறகு அதற்கான பதில்களை வாதி எடுத்துவைத்த பிறகு, இறுதி விசாரணை தொடங்குகிறது. நீதிபதி தன் இறுதித் தீர்ப்பை வழங்குகிறார்.
தலைமை நீதிபதிக்கு சில உண்மைகளைத் தெரிவித்து எழுதப்பட்ட கடிதத்தை பொது நலவழக்காகக் கருத முடியுமா? 1990களின் ஆரம்பத்தில், நீதிபதிகள் உண்மைகள் குறிக்கப்பட்ட தபால்அட்டைத் தகவல்களை பொதுநல வழக்குகளாகக் கையாண்டிருக்கின்றனர்.
இவற்றில் மாதிரிக்கு ஒரு சில:
ஹிமாசலப்பிரதேசத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள முசூரி என்ற நகரின் அருகில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு சுண்ணாம்புக்கல் எடுக்கும் தொழிலால், அந்தப் பகுதியின் சுற்றுச்சார்பு பாதிக்கப்படுவதாக நீதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் பொதுநலவழக்காக எடுத்துக் கொள்ளப்-பட்டது. உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரக்கூடாது:
கடந்த காலங்களில் ஒரு சிலர் பொதுநலவழக்கு என்ற அறிவாயுதத்தை தவறான உள்நோக்கத்துடன் துஷ்பிரயோகம் செய்தனர். இதனால், உச்சநீதிமன்றம் பிரச்சினைகளைப் பற்றிய சரியான தகவல்களையும், உண்மையான செய்திகளையும் தருமாறு பொதுநலவழக்கு ஆர்வலர்களிடம் கேட்கிறது. இதன் அடிப்படையில், சட்ட அம்சங்-களை நன்கு ஆய்ந்து, எதிர்தரப்பு பிரதிவாதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கிறது. பொதுநல-வழக்குத் தொடர்வதற்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், நீதிமன்றம் ஒரு கடிதத்தை பொதுநலவழக்காக விசாரணைக்கு எடுக்க-முடியும். அனைத்து உண்மையான தகவல்-களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவேண்டும். அவற்றின் இயல்புகளை அலசி ஆராய்ந்து மிகவும் அவசரமான நிலை என்று நீதிமன்றம் தீர்மானித்தால், அந்தப் பொதுநல வழக்கு தீர்விற்காக எடுத்துக்கொள்ளப்படும்.
இடைக்கால நிவாரணங்கள்
இறுதி முடிவு தீர்மானம் செய்யப்படுவது வரையிலும், பொதுமக்களின் நலன் கருதி, நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க முடியும்,
ஒரு குழுவை நியமனம் செய்வது நீதிமன்றம், இந்தப் பிரச்சினைப் பற்றி ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு கமிட்டியை அல்லது ஆணையரை நியமனம் செய்யலாம்.
ஒரு ரிட் மனுவை பொதுநலவழக்காக கையாள முடியுமா?
ஆம், பாதிக்கப்பட்டவரால் தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது ஒரு குழுவோடு சேர்ந்தோ தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை, பொதுநல வழக்காகக் கையாள முடியும். ஒரு பிரச்சினை பொதுஜனங்களை பாதிக்கும் பட்சத்தில் (ஒரு தனிமனிதனை அல்ல) ரிட் மனுவை பொதுநலக் வழக்காகக் கையாள முடியும்
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநலவழக்கு: உயர்நீதிமன்றம், உச்சநீதி-மன்றம் _- இரண்டிற்கும் பொதுநலவழக்கை கையாளும் அதிகாரம் உண்டு.