வாட்டர் ஹீட்டர்
“தண்ணிர் சூடானதும், தானாகவே அணைந்துவிடும் வகையில்தான் வாட்டர் ஹீட்டர்கள் வருகின்றன. என்றாலும், சுவிட்சை ஆ ஃப் செய்து விட்டு குளிக்கச் செல்வதுதான் பாதுகாப்பானது. ஏனெனில், ஹீட்டரின் உள்ளே இருக்கும் காயில் எந்த நேரத்திலும் பழுதடைந்து லேசான அளவில் ஷாக் வரக்கூடும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணர் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும்பட்சத்தில். காயில் அடிக்கடி பழுதாக வாய்ப்பு உண்டு. அதனால், தண்ணிரின் தன்மையைப் பொறுத்து சர்விஸ் செய்யுங்கள். வாட்டர் ஹீட்டருக்கு உயர் மின் சாதனங்களுக்கு பொருத்தக்கூடிய சுவிட்ச்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளிக்கும்போது சோப்பு மற்றும் தண்ணீர் பட்டால், வாட்டர் ஹீட்டர் துருப்பிடித்து பாழாகக்கூடும். அதனால், உயரமான இடத்தில் அதைப் பொறுத்துவதுதான் நல்லது.
வாட்டர் பியூரிஃபயர்.
வீட்டுக்கான வாட்டர் டேங்க்கில் போதுமான தண்ணீர் இருக்கும்போதுதான் வாட்டர் பியூரிஃபயரை உபயோகிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் இயக்கினால், மோட்டாரை பாதிக்கும். கேஸ் அடுப்பு மற்றும் ஜன்னல் அருகே வாட்டர் பியூரிஃபயர் பொருத்தக்கூடாது, அப்படி செய்தால், பியூரிஃபயரின் டேங்க் பாசி பிடிக்கும். அடுப்பின் பக்கத்தில் வைப்பதால் எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படும். பயன்படுத்தி முடித்ததும் சரியாக சுவிட்ச் ஆஃப் செய்வது, தண்ணீரின் கடினத் தன்மையைப் பொறுத்து ஃபில்டரை அடிக்கடி சரிபார்த்து மாற்றுவது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணியைக் கொண்டு டேங்க் மற்றும் குழாய் பகுதிகளை அவ்வப்போது துடைக்க வேண்டும். மெஷினை கவர் போட்டு மூடி வைப்பதன் மூலம், மாசு படாமல் புதுப் பொலிவுடன் பாதுகாக்கலாம்.
ஃப்ரிட்ஜ்
ஓவர் லோடு என்பது ஃப்ரிட்ஜுக்கு ஆகவே ஆகாது. எனவே, அதிகமான பொருட்களைத் திணிக்க வேண்டாம். முக்கியமாக டோர் பகுதியில் அதிக வெயிட் கொடுக்கும்போது, டோரில் உள்ள பாகங்கள் (றிணீக்ஷீ) கழன்று விழக்கூடும். நாளடைவில் டோர் உடையவும் கூடும். ஃப்ரீஸர் பகுதிக்குள் கசியும் நிலையில் இருக்கும் பால் பாக்கெட்டுகளை வைக்காதீர். அது மின்தடையின்போது டிரேயில் இறங்கி, தரை வரை வழியக்கூடும். எப்போதும் ஃப்ரிட்ஜை ஸ்டெபிலைசருடன் பொருத்துங்கள். அடிக்கடி திறந்து மூடுவதால் மின் கட்டணம் அதிகமாவதுடன், ஃப்ரிட்ஜின் ஆயுள் காலமும் குறைய வாய்ப்புள்ளது.
பளிச்சிடும் சிம்னி!
சமையலறையில் புகை நெடி எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்க சிம்னியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் மஞ்சள் கறை மற்றும் பிசுபிசுப்புடன் இருக்கும் சிம்னியைப் பார்த்தாலே சுத்தம் செய்வது பற்றிய பயம் நம் எல்லோருக்கும் வந்துவிடும். ஆனால், சிம்னியை சுத்தம் செய்வது ரொம்பவே சிம்பிள் விஷயம் தான். நான்கு நாட்களுக்கு ஒரு தரம் சிம்னியின் ஃபில்டரை கழற்றி. வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு எடுத்துக் கழுவினால் பளபளக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால். சமையல் சோடாவுடன், சோப்புத்தூள் கலந்து தேங்காய் நார் கொண்டு தேய்த்தால். பளீர் பளீர்தான்! எப்போது சமைத்தாலும் சிம்னியை ஆன் செய்து சமையுங்கள். அப்போதுதான் சிம்னிக்கு வெளிப்புறம் அழுக்கு படிவது குறையும்.
மைக்ரோவேவ் அவ்அன் எப்போதும் மைக்ரோவேவ் அவ்அன் காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்கப்பட வேண்டும் கரப்பான்பூச்சி மற்றும் எறும்புகள் அவ்அன் உள்ளே துழையாமல் இருக்கவேண்டும். இதற்கு அதனருகே உணவுப் பொருட்-களோ, குப்பைக் கூளங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும். சமைத்து முடித்ததும் குறைந்தது 10 நிமிடங்களாவது அவ்அன் கதவைத் திறந்து வைத்து, பிறகு காட்டன் துணியால் சுத்தம் செய்யுங்கள். க்ரில் மற்றும் கண்ணாடி உபகரணங்களை கவனத்துடன் துடைத்து கையாள்வது அவசியம். இந்த சாதனத்துக்குத் தேவையான மின்சாரம், சரியான அளவில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் சரியான டைமிங் செட் செய்து முறைப்படி சமைப்பதுதான் அவ்அன் பராமரிப்புக்கான சிறந்த வழி.
ஜிலு. ஜிலு. ஏர்கண்டிஷனர் ஏ.சி.யில் இருக்கும் ஃபில்டரை வாரம் ஒருமுறை கழற்றி சுத்தமான நீரில் சோப்புத் தூளைக் கலந்து ஊற வைத்துக் கழுவ வேண்டும். அழுக்கு அதிகமாக இருந்தால் டூத் பிரஷ் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஏ.சி. மெஷினை ஆண்டுக்கு ஒருதடவை சர்விஸ் செய்வது முக்கியம். இல்லாவிட்டால் நீங்கள் ஆசை ஆசையாக வாங்கிய ஏ.சி.யில் இருந்து ஹாட் ஏர் வருவதுடன். நமக்கு டஸ்ட் அலர்ஜியும் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தால் நீரில் நனைத்துப் பிழிந்த சுத்தமான காட்டன் துணியால் மெஷினின் மேற்புறத்தை வாரம் ஒரு தடவை துடைக்கலாம். சரியான பராமரிப்பு மட்டுமே ஏ.சி.யின் ஆயுளைக் கூட்டும் என்று சொன்ன பாலமுருகன்,
ஆகமொத்தம் சிறுதுளி பெருவெள்ளம் போல், சிறுசிறு ரெகுலர் பராமரிப்பு. நம் வீட்டு உபயோகப் பொருட்களை சிதையாமல் பாதுகாக்கும்னு அக்கறையான அறிவுரையும் கொடுத்தார்.
இதையெல்லாம் கவனமா ஃபாலோ பண்ணினா, ஆபிஸ் நேர டென்ஷனும் வராது. மூணு மாசத்துக்கு ஒருமுறை மொய் எழுத வேண்டிய அவசியமும் இருக்காது என்ன இந்த டீல் ஓகேதானே!