1. மலச்சிக்கலைத் தடுக்கிறது: மூன்று அத்திப்பழங்களில் ஐந்து கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. எனவே, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கின்றது.
2. எடைக் குறைப்பு: உடல் பருமனால் அவதிப்படுவர்கள் தமது எடையை குறைத்துக் கொள்ள அத்திப் பழம் பரிந்துரைக்கப்படுகிறது.
3. கொழுப்பைக் குறைக்கிறது: அத்திப்-பழத்தில் அமைந்துள்ள பெக்டின ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து. எனவே இந்த நார்ச்சத்து செரிமானப் பாதையில் பயணிக்கும் போது தேவையற்ற கொழுப்புகளை உடலை விட்டு வெளியேற்றுகிறது.
4. இதயநோயைத் தடுக்கிறது: அத்திப்பழத்தில் அடங்கியுள்ள பினால், ஓமேகா-6 ஆகிய அமிலங்கள் இதயநோய்த் தாக்கத்தின் அபாயத்தை மட்டுப்படுத்துகிறது.
5. குடல் புற்றுநோயைத் தடுக்கிறது: அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய்க் காரணிகளை உடலை விட்டு வெளியேற்றுகிறது.
6. மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது: பெண்களுக்கு மாதவிடாய் நிற்றலுக்கு பிந்தைய காலத்தில் மார்பகப்புற்று நோய் ஏற்படாமல் காக்கிறது.
7. நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் தருகிறது: இன்சுலின் சார்ந்த டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இன்சுலின் தேவையை மட்டுப்படுத்துகிறது. பொட்டாசியம் அடங்கியுள்ள காரணத்தால் உடலின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கத் துணை புரிகிறது. அத்திமர இலைகள்கூட சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தவை ADA எனப்படும் அமெரிக்கன் டயபட்டீஸ் அசோசியேசன் நார்ச்சத்து நிரம்பிய உணவு என அத்திப்பழத்தை பரிந்துரை செய்கிறது.
8. உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது: பொதுவாக மக்கள் அதிக அளவில் சோடியத்தை உணவில் சேர்க்கின்றார்கள். குறைவான அளவில் பொட்டாசியம் உடலில் இருப்பதும், அதிக அளவில் சோடியம் இருப்பதும் உயர் இரத்த அழுத்தத்துக்குக் காரணிகள் ஆகும். அத்திப்பழம் இயல்-பிலேயே அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு சோடியமும் அமைந்த பழம். எனவே உயர் இரத்த அழுத்த நோயைத் தடுக்கும் மருந்தாக அத்திப்பழம் திகழ்கின்றது.
9.பாலியல் குறைபாட்டைக் களையக் கூடியது: பாலியல் பலவீனங்களைக் களைய ஆதி காலந்தொட்டே அத்திப்பழம் பயன்-படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை இரவில் பாலில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டால் பாலியல் சக்தி கூடும். மேலும் உடல் மெலிந்தவர்கள் இம்முறைப்படி உண்டு வந்தால் எடை அதிகரிக்கும்.
10.எலும்புகள் வலிமை பெற: கால்சியம் சத்து அடங்கியுள்ளதால் உடல் எலும்புகள் வலிமை பெற அத்திப்பழம் உதவுகின்றது.
11.கால்சியம் இழப்பை ஈடு செய்ய: அதிக அளவு உப்புச் சத்து அடங்கிய உணவை உண்ணும் மக்கள் சிறுநீர் வழியாக கால்சியம் இழப்பு ஏற்பட்டு அவதியுறுவர். பொட்டாசியம் அடங்கிய அத்திப்பழம் அவர்களின் கால்சியம் இழப்பை ஈடு செய்கிறது.
12.கருவிழி பாதிப்பைத் தடுக்க: முதுமைப் பருவத்தில் கருவிழி பாதிப்பு காரணமாக ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்கிறது.
13.தொண்டைப் புண்ணைக் குணப்படுத்த: அத்திப்பழத்தில் அமைந்துள்ள பிசின் போன்ற தன்மை தொண்டையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்துகிறது.
14.கடும் இருமல், மூச்சிறைப்பு நோய் (ஆஸ்துமா) போன்ற சுவாசம் தொடர்பான நோய்களுக்கு நன்மருந்தாக விளங்குகின்றது.
15.உடலின் அமிலத்தன்மையை (Ph of the body) சீராக வைத்திருப்பதற்கு, அத்திப்பழத்தின் காரத்தன்மை துணை செய்கிறது.
16.இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அக்குறை நீங்கும்.
அளவோடு உண்க:
இவ்வளவு நன்மைகளைக் கொண்டிருக்கும் அத்திப்பழத்தை அளவோடு உண்டு நலமுடன் வாழ்வோம். ஏனெனில் அதிக அளவு உண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படக் காரணமாகி விடும்.
உலர்ந்த அத்திப்பழம் இனிப்புச் சுவை நிறைந்தது. எனவே இதனையும் மனதில் கொள்ளவேண்டும்.