மொழிக்கு வளர்ச்சி உண்டு, வாழ்வு உண்டு, இறப்பும் உண்டு. காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி புதுச்சொற்களை உண்டாக்க நம் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழ் எழுத்துகளை மொழிக்கொலை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இதனை அறிந்தே,
தமிழினைப் போல் உயர்ந்த மொழி
தரணியில் வேறெங்குமில்லை
தமிழனைப் போல் மொழிக் கொலையில்
தலைசிறந்தோர் எவருளரே!
என்று பாடியுள்ளார் ஒரு கவிஞர்.
இன்றைய வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழியை, தமிழைத் தேனே என்று பார்க்காமல் தமிழ் தானே என்று பார்க்கும் சூழல் உருவாகிறது.
சான்றாக:
தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படமான அகத்திணை என்ற படத்தின் பெயரானது அக திணை என்று வைக்கப் பட்டுள்ளது.மேலும் மொழிக்கொலையை உடைய திரைப்படங்களின் பெயர்களில் சில,
அறிந்தும் றியாமலும், தில்லா ங்கடி, மு டு கைதி போன்ற படங்களின் பெயர்களில் மொழிக் கொலையானது நடைபெற்றுள்ளது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என்று பாடியவர் வள்ளலார். அதுபோல தமிழ் மொழிக்கொலை எங்கெல்லாம் கண்ணில் படுகின்றதோ! அங்கெல்லாம் இந்தத் தமிழ்ப்பித்தன் (சுரேசு ) அப்பிழையை அழிக்கும் நிலையானது ஏற்படுகின்றது.
இவ்வாறு தமிழ் மொழியின் வரி வடிவத்தை மாற்றி எழுதி, தமிழ் மொழியைக் கொலை செய்யும் திரைப்படத்துறையினர் இதை முற்றிலுமாகக் களைய வேண்டும்.
எனவே தமிழ் திரைப்படத் துறையினரும் தணிக்கைத்துறையினரும் இணைந்து செயல்பட்டு, இதுபோன்ற தவறுகளை முழுவதுமாக நீக்க வேண்டுமென பணிவுடன் வேண்டுகின்றேன் நன்றி.
– மா.சுரேசு எம்.ஏ., பி.எட்.,
தமிழ்க்கட்டூர் இயக்க அறிவுடையர்,
வெற்றிலை ஊருணி,
திருவில்லிப்புத்தூர்.