எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள்
மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958_2014) அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எம்.எஸ்.எஸ். பாண்டியன் பெயரில் வெளியிட்டுள்ளன.
இப்புத்தகத்திலுள்ள மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வந்திருப்பினும் ஒன்றோடொன்று கருத்துரீதியாக தொடர்புடையவையாக உள்ளன.
தேசியத்தை பழமையிலிருந்து விடுவித்து எதிர்காலத்தில் நிலைகொள்ள பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலை, போராட்டம் மூலம் முன்னேற்றம் தேவை என்று பெரியார் வழிகாட்டியதாகக் கூறுகிறார்.
மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பதே பெரியாரின் கருத்து என்று எழுதிய திரு. பாண்டியன் அவர்கள், அடித்தட்டு மக்கள் பகுத்தறிவு, அறிவியல் ஆகியவற்றின் மூலமே சுயமரியாதையையும் அதன்மூலம் அரசியல் முகமையையும் பெற முடியும் என்று பெரியார் அவர்கள் கருதியதாகவும் கூறியுள்ள நிலையில், பாண்டியன் அவர்களின் எழுத்துகள் பன்மைப் புலம் சார்ந்ததாகவும், பெரியார் அவர்கள் நிலைகொண்ட திராவிட அரசியல் ஆதரவு என்பதாகவும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
புத்தகத்திலுள்ள அய்ந்து கட்டுரைகளுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களின் அறிவுக் கூர்மையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகிறது. அறிவை வளர்த்துக்கொள்ள விழைவோருக்கு இந்த நூல் சிறப்பு விருந்து என்று கூறினால் தவறில்லை.
வெளியீடு :
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.
பக்கங்கள்: 95, விலை: 75/-