’அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’

ஜூன் 16-30

ஆசிரியர்:      பேராசிரியர் அ.அய்யாசாமி     வெளியீடு :          அன்னை முத்தமிழ்ப்            பதிப்பகம்,      10 (ணி55), மூன்றாம்        குறுக்குத் தெரு,     திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72

அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அணிந்துரை அளித்து அனைவரும் படித்து, பரப்ப வேண்டு என்கிறார் என்றால் அந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை எளிதில் உணரலாம்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒரே நோக்கத்திற்கான இரு பிரிவுகள் என்பது அதன் பொருள். அதை மிகச் சரியாக அய்யாவும் அண்ணாவும் உறுதி செய்தனர். அதன் பின் கலைஞரும், அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் நிலைநாட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிக்கு மட்டுமே ஆரியம் அலறுகிறது என்பதே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.

அண்ணா கண்ட _ கொண்ட ஒரே தலைவர் பெரியார். பெரியாரின் வழிசென்று அரிய சாதனைகள் புரிந்தவர் அண்ணா. அண்ணாவிடம் பெட்டிச் சாவியை ஒப்படைத்தவர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு,மத ஒழிப்பின் மூலமே முடியும் என்ற அய்யாவின் முடிவை அண்ணா ஏற்றார். அரசியல் ஈடுபாட்டில் அய்யாவிடம் அண்ணா வேறுபட்டார். விளைவு தி.மு.க.

திராவிட அமைப்புகள் பிரிந்து பிரிந்து வளர்ந்தன. அதன் பயன் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லை, பெரியார் என்ற வழிகாட்டலை சொல்லாமல் அரசியல் இல்லை என்றானது. இதுதான் ஆரியத்தைக் கலக்குகிறது.

அண்ணா அரசியலில் சாதித்தார். அய்யாவின் எண்ணத்தைச் சட்டமாக்கினார். எதிரியின் தோளில் ஏறி எட்ட வேண்டியதை எட்டிய கெட்டிக்காரர் அண்ணா. அவரை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது கொள்கை வெளிச்சத்தில். இதுபோன்ற நூல்கள் ஏராளமாய் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். இது ஒரு தொடக்கப் பாடநூல். இதன் வழி பல்கலைக்கழகம் வரைப் பயிலலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *