அண்ணல் அம்பேத்கரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமும்

ஏப்ரல் 01-15

 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற குறளுக்கு ஏற்ப அண்ணல் அம்பேத்கர் மானுட சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியது என்பது நாம்  அனைவரும்  அறிந்ததே. தன் பரந்துபட்ட படிப்பறிவையும், சட்ட அறிவையும், அண்ணல் அரசியல் சட்டம் எழுதுவதற்கு  மெய்வருத்தம்  பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், அதற்கும்  மேலாக  இழிமொழிகள், ஏளனங்கள் ஆகிய-வற்றைப் பொருட்படுத்தாமல் அரசியல் சட்டத்தினை வகுத்தளித்தார்.  அரசியலமைப்புச் சட்ட வரைவு பற்றி பல்வேறு வகையான விவாதங்கள் வந்தபோது தனது நுணுக்கமான சட்ட அறிவைக்  கொண்டு அதனை  வடித்தெடுத்தார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் அனைவரும்  ஓரணியில்  நின்று  இந்து மதக் கொடுங்கோன்மையை எதிர்க்க வேண்டும் என்பது அண்ணலது பெருவிருப்ப மாகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்-குடியினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவது போல் பிற்படுத்தப்-பட்டோருக்கும்  இட ஒதுக்கீடு  அளிக்கப்பட  வேண்டும் என்று அண்ணல்  வலியுறுத்திய போது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது நிதர்சனமான  உண்மையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பால், இனம், மொழி, ஜாதி, பிறப்பிடம்  ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களிடையே  எந்தவிதமான  வேறுபாடும்  காட்டக்கூடாது என்று  அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவில் கூறப்பட்டிருந்தது. அதே சமயத்தில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29(2)இல் சிறுபான்மையினர் நலன் பற்றியும் குறிப்பிடப்-பட்டிருந்தது. தமிழகத்தில் நீதிக்கட்சி  ஆட்சியில் முதன்முதலாக வகுப்புவாரி உரிமை  அரசாணை (சிஷீனீனீஸீணீறீ நி.ளி.) நடைமுறையில் இருந்தது.

அதன் அடிப்படையில் பெரும்-பான்மையான  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் மட்டுமல்லாமல் பார்ப்பனர் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளில்  இடங்கள் ஒதுக்கப்பட்டு அவை நடைமுறையில்  இருந்து வந்தன.

1937ஆம்  ஆண்டு நீதிக்கட்சி  தோல்வியடைந்து  காங்கிரஸ்   இராசகோபாலாச்சாரியார் தலைமையில் ஆட்சி  அமைத்தது.  ஆனாலும்-கூட இந்த விகிதாச்சார  பிரதிநிதித்துவ  வகுப்பு உரிமையில் தலையிடவில்லை.  இதற்கு வேட்டுவைப்பது போல் சென்னை உயர்-நீதிமன்றத்தில் 27.07.1950ஆம் ஆண்டு  மூன்று நீதிபதிகள் (நீதிபதி  பி.வி. இராசமன்னா, நீதிபதி விசுவநாத சாஸ்திரி மற்றும் நீதிபதி  சோமசுந்தரம்) அடங்கிய அமர்வில்  சென்னை  இராச்சியத்தில்  (தமிழ்நாட்டில்) அமலிலிருந்த  விகிதாச்சாரப்படியிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவை  மீறுவதாகக் கூறித் தீர்ப்பளித்தனர். ஸ்ரீமதி சண்பகம் துரைராஜன் எதிர் சென்னை  மாகாண  அரசு (கிமிஸி  1951 விணீபீ 120) என்ற வழக்கில்தான் மேற்படி தீப்பளிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டத்தினை   இயற்பியல், வேதியியல்  பிரிவில்  படித்த சண்பகம் துரைராஜன்  சென்னை  அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ்.  படிப்பதற்கு  மனு செய்திருந்ததாகவும்   தனக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்காமல் தன்னைவிட  குறைவாக  மதிப்பெண்  பெற்றிருந்த   பாப்பனரல்லாத சமூகத்தைச்  சோந்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்   கொடுத்துள்ளதாகவும்  அது இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி இனம், மொழி, ஜாதி அடிப்படையில் எந்த ஒரு இந்தியக்  குடிமகனுக்கும் கல்வியில் வேறுபாடு  காட்டக்கூடாது என்று சொல்லியிருப்பதற்கு மாறாக சென்னை மாகாண அரசாங்கம்  வகுப்புவாரி இடஒதுக்கீடுச் சலுகை  கொடுத்து வருவதாகவும், அந்த அரசாணை  செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கே அதற்குக் காரணம். மேற்படி வழக்கில் ஆஜராவதற்காக    அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் குழுவில்  உறுப்பினராயிருந்த சா. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சண்பகம் துரைராஜனுக்கு  ஆதரவாக வாதாடினார்.

வகுப்புவாரி  பிரதிநிதித்துவ  அடிப்படையில்  மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை  எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தும் அரசாணை எண். 1254 (கல்வி) நாள் 17.05.1948 செல்லாது  என்றும்  அறிவிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டில் தந்தை பெரியார்  போர்க்குரல் எழுப்பி மாபெரும் போராட்டத்திற்குப் பார்ப்பனரல்லாதார்  அணியமாக   வேண்டு-மென்று அறைகூவல் விடுத்தார். மேற்படி தீர்ப்பிற்கு எதிராக அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்தது.  மேற்படி மேல்முறையீடு 09.04.1951 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. மேல்முறையீட்டிலும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே உச்ச நீதிமன்றத்தில் சண்பகம் துரைராஜனுக்கு வாதாடினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு  வந்தவுடன்  இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக  எழுப்பப்பட்டது.  இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நேரு அவர்களால்  12.05.1951  அன்று இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்த மசோதாவாகத்  தாக்கல் செய்யப்பட்டது.  அதில் பிரிவுகள் 15, 19, 85, 87, 174, 176, 341, 342, 372, 376  ஆகியவற்றில் திருத்தமும்  புதிதாக 31கி, 31ஙி ஆகியவற்றைச்  சேர்க்கவும் தாக்கல் செய்தார்.  இதில் மிக முக்கியமானது பிரிவு 15இல்  உட்பிவு 3அய் இணைத்து கல்வியில்  பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நாட்டிலுள்ள பிற்படுத்தப்-பட்ட மக்களுக்கு அளிக்கும்  சலுகைகள் இனம், மொழி, பால், ஜாதிப்  பாகுபாட்டிற்குப்  பொருந்தாது  என்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேற்படி அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்வதற்கு அண்ணல் அம்பேத்கர் முழுமை-யான ஆதரவினை அளித்து தன்னுடைய தேர்ந்த  வாதத்திறமையினால் மிகப்பெரும்-பான்மையினர் ஆதரவளிக்க அண்ணல் அவர்கள் ஆற்றிய  அரிய  உரையே  காரண-மாகும். கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கும் மேலாக தன்னுடைய உரையில்  மிகவும் இடர்பாடான  நுட்பமான   அரசியல் சட்டம் மற்றும்  சட்டங்கள் குறித்த சிக்கல்கள் பற்றி விளக்கி கூர்மையான அறிவு  நுட்பத்துடனும் தெளிவுடனும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய   உரைகளி-லெல்லாம் தலைசிறந்தது என்று 19.05.1951ஆம் நாளிட்ட தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெகுவாகப்  பாராட்டியிருந்தது.

அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய உரையில் ஜாதிகளுக்கிடையே வேறுபாடுகளைக் காட்டுகிறது என்ற அடிப்படையில்  சென்னை மாகாண  அரசின் வகுப்புவாத ஆணையை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்திருப்பது எவ்வகையிலும்  சரியானது அன்று என்றும் மேற்படி தீர்ப்பு அரசியல் சட்டவிதிகளின்  அடிப்படையில் அமைய-வில்லை என்றும் கூறியபோது பெரும் கூச்சலையும்,  குழப்பத்தையும்  நாடாளுமன்றம் சந்திக்க  நேர்ந்தது. பொதுவாக  அண்ணல் அமபேத்கரை விமர்சனம் செய்பவர்கள் அவர் ஒரு முன்கோபி, எளிதில் சினம் கொள்ளக்-கூடியவர் என்பார்கள். ஆனால் கடும் கூச்சலையும், குழப்பத்தையும்  ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே  அமைதியாக இருந்து பின்பு நிசப்தமான அமைதி ஏற்பட்ட-பின் அண்ணல் அம்பேத்கர்  மிகத் தெளிவாகக்  கீழ்வருமாறு  கூறினார்.

அரசியல் சட்டவிதி  29(2)  மதம், இனம், ஜாதியின் பெயரைக் காரணம் காட்டி எந்த ஒரு குடிமகனுக்கும் எந்தவொரு கல்வி நிலையத்திலும் சேர்ந்திட அனுமதி மறுக்கக்கூடாது என்பதில்  உச்ச நீதிமன்றம் மட்டும் என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளத்  தவறிவிட்டது.

விதி 46இல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்-பட்டுள்ளது விதி 46இன் நோக்கத்தை நிறைவேற்ற  வேண்டுமானால் விதி 16 (4) மற்றும் விதி 29(2) ஆகியவற்றைத் திருத்த வேண்டும். விதி 19(2)க்கான திருத்தம் என்பது பேச்சுச் சுதந்திரத்தில் கருத்தைக் கூறும் உரிமை, பொது அமைதி காத்தல், குற்றம் இழைக்கத் தூண்டுதல், அயல் நாடுகளுடான நட்புறவு ஆகிய மூன்று தலைப்பினங்களோடு தொடர்புடையதாக  இருக்கின்றது. எனவே மேற்படி திருத்தங்கள் கொண்டு வருவதை ஆதரிக்கிறேன். மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தில்  முதல் திருத்தம்  தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாகவும்   அண்ணல் அம்பேத்கரின் வலுவான ஆணித்தரமான  வாதத்தின் காரணமாகவும் பெரும்பான்மை உறுப்பினர்களால்  ஆதரிக்கப்பட்டு, அதனடிப்படையிலே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்  வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவத்தோடு சமூக நீதியினைப்  பெற்று வருகின்றனர்.

இப்போது சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் நல்லது செய்தாரா?

– சு.குமாரதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *