கருத்து

பிப்ரவரி 01-15

மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

– தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

– கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

– மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

 


சொல்றாங்க…

 

பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

– ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க…

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா… நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா… நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க…

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

– பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க…

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது… நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா… விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க…

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான்.  – நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க…

ஆமாங்க… அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *