பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள்.
860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்து 1971ஆம் ஆண்டில் வெளியிடப்-பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது.
சத்ய யுகம் 1728000ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள். மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படிச் சரியாகும்?
கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி-விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?! –
– க.அருள்மொழி, குடியாத்தம்