சமூக இணையதளங்களில் இருக்கிற பார்ப்பன நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களில் பல பேர் எங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், பண்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான், அதற்காக இன்னும் பன்னெடுங்காலம் பேச எஞ்சியிருக்கிற பார்ப்பன எதிர்ப்பு அரசியலை எங்களால் பேசாமல் இருக்க முடியாது.
வேண்டுமானால் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் தீட்சதர்களாகவோ, பூசாரிகளாகவோ உங்கள் உறவினர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களிடம் நீங்களே பேசுங்கள். “இது எல்லாம் அவா கட்டின கோவில், நம்மவா யாரும் பத்துப் பைசாகூட கைக்காசு போடல, அவாளோட மொழில நாம பூஜை பண்றதும் கிடையாது, அவா நிறையப் பேரு ரொம்பக் கோவமா இருக்கா, நம்மவா எல்லாம் இப்போ நன்னா படிச்சு கையில நாலு காசு சேத்திண்டு ஷேமமா இருக்கா, அவா அபச்சாரம் அபச்சாரமா திட்றத நம்ம அம்பிகள் எல்லாம் கூச்சமா பீல் பண்றா, அதுனால நாம அவா கட்டின கோவில்கள்ல இருந்து வெளியே வந்துடலாம், நாமளே சிதம்பரம் என்ன தஞ்சாவூர் என்ன இன்னும் பெரிசா கோவில் கட்டி அதுல சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம்_ன்னு வெவ்வேற மொழிகள்ல அர்ச்சனை பண்ணலாம், பூஜை பண்ணலாம்” என்று முடிவு செய்து ஒரு நல்ல நாள் குறித்து எல்லாக் கோவில்களிலும் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்களும் கூச்சமா உணர வேண்டியதில்லை, நாங்களும் பொசுக்குப் பொசுக்குனு பாப்பான் பாப்பான்_ன்னு திட்ட வேண்டியதுமில்லை.
டீல் ஓகே யா?
…முகநூலில் அறிவழகன் கைவல்யம்