இன்பம் எங்கே?

மே 01-15

– ந.ஆனந்தம்

மகிழ்ச்சி என்பது நிரந்தர இன்பத்தைக் குறிக்கிறது. நினைக்கும போதெல்லாம் இன்பம் தருவதைக் குறிக்கிறது. இது மன உணர்வும், மன திருப்தியும் சம்பந்தப்பட்டதாகும். மன மகிழ்ச்சி என்ற உணர்வை எளிதில் விளக்க இயலாது. மகிழ்ச்சி என்ற உணர்வு மனிதர்களிடம் ஒரே தன்மையில் இருப்பது இல்லை.

அது மனிதனுக்கு மனிதன் வேறு-படுகிறது. அதனால்தான், ஒரு செயலைச் செய்து அல்லது அனுபவித்து ஒரு மனிதன் மகிழ்ச்சியடைகிறான். இன்னொரு மனிதன் அதே செயல்பாட்டிற்கு அதே மகிழ்ச்சி உணர்வைப் பெறுவதில்லை. மனிதனின் நம்பிக்கை, அறிவு, மனவளர்ச்சி, இட காலச் சூழல் போன்ற பல காரணிகள் இவ்வேறு-பாட்டிற்கு காரணிகளாக அமைகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மனிதனின் மகிழ்ச்சியை அவனின் மனம்தான் தீர்மானிக்கிறது.

சுவையான உணவு உண்ணுதல், மது அருந்துதல், சூதாட்டம் ஆடுதல், உடலுறவு கொள்தல் போன்ற கிளர்ச்சியூட்டும் செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இச்சரீர இன்பங்கள் மனித வாழ்விற்கு அவசியமானதெனக் கருதலாமே தவிர, வாழ்க்கையின் இலக்காக அவைகளைக் கொள்ள இயலாது. இவைகளால் பேரானந்த உணர்வை, நினைந்து மகிழும் இன்பத்தை அளிக்க இயலாது. எனவே, அவைகள் மட்டுமே மகிழ்ச்சிக்கான கருவிகள் எனக் கருதக்கூடாது.

போதை வஸ்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவைகளை உட்கொண்டவுடன் ஒரு இனிய மனக்கிளர்ச்சியை அனுபவிக்கிறார்கள். அனைத்து மதுபானங்களும், போதைப் பொருட்களும் மனிதனது நரம்பு மண்டலத்தைத் தூண்டி ஒரு விதமான பரவச நிலையை உண்டாக்குகின்றன. அக்கிளர்ச்சியையும், அவை உண்டாக்கும் மயக்க நிலையையும் அவர்கள் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

மதுவிற்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமை-யானவர்கள் மனநோயாளிகள் என்பது மனோதத்துவ மருத்துவர்களின் கருத்தாகும். போதைப் பொருட்களை உட்கொண்டு யதார்த்த உலகிலிருந்து விலகி விடுகிறார்கள். எனவே, எத்தகைய, போதைப்பொருட்களும் மனிதனுக்கு நிரந்தர இன்பம் அளிப்பவை அல்ல. அவைகளுக்கு மனிதன் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

மகிழ்ச்சிக்கான தேடலில் தன்னுடைய மகிழ்ச்சியே பிரதானம் என்று கருதுவது இன்னொரு பொதுக் கருத்தாகும். இக்கருத்து தன்னலத்தையும், தன் முன்னேற்றத்தையும் மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. பொதுநல நோக்கைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. சமூக ஒழுங்கீனத்திற்கு வித்திடுகிறது. சகமனிதர்களின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் சம முக்கி-யத்துவம் அளிப்பதே சரியான ஒழுக்கமாகும்.

தம்முடைய மகிழ்ச்சிக்காக அடுத்தவருடைய உரிமைகளில் குறுக்கிடுவதும், உரிமைகளை மறுப்பதும் ஒழுக்கமற்ற செயலாகும். சமூக பொதுவிதியை மீறும் செயலாகும். எனவே, தன்னலத்தை மேன்மைப்படுத்தும் எச்செயலையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மகிழ்ச்சியை அடைய ஒழுக்க விழுமியங்-களை நேர்மையாகக் கடைப்பிடிப்பதே சரியான வழிமுறை என்பது ஒழுக்கவாதிகளின் கருத்தாகும். இது உண்மையென்றாலும் இதற்கும் ஒரு வரையரை அல்லது எல்லை உண்டு.

ஏனெனில், அனைத்து ஒழுக்கவிதிகளும் நிரந்தரமானவை அல்ல; மாறுதல்களுக்குட்-பட்டவையே. மகிழ்ச்சியும், அதற்குரிய செயல்பாடுகளும் பிரிக்க முடியாதவண்ணம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஒன்றையொன்று சார்ந்தவை. அவற்றின் சார்புத்தன்மையை விவரிக்கும் தத்துவ அறிஞர் டிஸ்ரேலி செயல்பாடு மகிழ்ச்சி அளிக்காமலிருக்கலாம்; ஆனால் செயல்பாடில்லாமல் மகிழ்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

சோம்பேறி வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை அன்று. உதாரணமாக, மனிதனுக்கு உணவு மட்டும் அளித்து-விட்டு ஒரு வேலையும் அளிக்கா-விட்டால் அவன் சந்தோஷமாக இருப்பதில்லை. தொடர்ந்து அதே நிலையில் வைக்கப்பட்டால் அவன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு உள்ளாகிவிடுகிறான். இது உணர்த்தும் உண்மை என்னவென்றால், சராசரி மனிதன் ஏதாவதொரு வேலையைச் செய்ய மனதளவில் தயாராகவேயிருக்கிறான் என்பதுதான்!

அவன் வேலையில் எப்பொழுது வெறுப்படைகிறான் என்றால், தான் செய்யும் வேலை எந்தவித நல்விளைவுகளையும் உண்டாக்கவில்லை என்று உணரும்போதுதான் என்பது மனோதத்து-வர்களின் கருத்தாகும். எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நினைப்பவன்தான் இயற்கை விதிக்கு முரண்பட்டவன் என்பது அவர்களின் கருத்தாகும். ஆகவே, பணியில் ஈடுபடுவதே இயற்கை நியதி. மனிதனை ஆக்கபூர்வமான செயல்களில் நேர்மையாகச் செயல்படச் செய்வதே ஒழுக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

எச்செயல்களையும் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்று தரம் பிரித்தல் தவறானது. எல்லாச் செயல்பாடுகளும் மனித சமுதாயம் செம்மையாக இயங்க தேவையானவையாகும். ஈடுபாடோடு ஆக்கபூர்வமான வேலை செய்வது மகிழ்ச்சியை அடைவதற்கான முதற்படியாகும். சிந்தனை செய்து படைப்புகளைப் படைப்பது மனிதனுக்கு ஓர் இனிய, மகிழ்ச்சியான அனுபவமாகும். ஏனெனில், மனிதன் படைப்பாற்றல் செய்ய ஆற்றலுள்ளவன்.

எப்பொருள் பற்றியும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து புதியன படைக்க வல்லவன். ஒவ்வொருவரும் தன்னுடைய ஆர்வம், விருப்பத்திற்கேற்ப பொருளைத் தேர்ந்தெடுத்து அப்பொருளில் படைப்புகளைச் செய்யக் கடமைப்பட்டவர்கள். எப்பொருள் ஆய்விற்கு ஏற்றது என்று கணிப்பது ஒரு கடினமான காரியமாகும். ஏனெனில், வரலாற்று ரீதியாக மிகச் சிறந்த படைப்புகள் அறிஞர்களால் பயனற்றது என்று கருதப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்-காலத்திலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திலும் (கி.பி. 1880-_1910) சுய உந்துசக்தி கொண்ட வாகனத்தையும், பறக்கும் வாகனத்-தையும் கண்டுபிடிக்கும் முயற்சிகளைப் பயனற்ற செயல்கள் என்று பெரும்பான்மையோர் கருதினர். எனினும், விமர்சனங்களைச் சட்டை செய்யாமல், சிலர் ஆய்வை மேற்கொண்டனர். அதனால் பயனுள்ள வாகனங்கள் கண்டுபிடிக்கப்-பட்டன.

கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மானியர் பெட்ரோல் எரிசக்தியால் இயங்கும் இன்ஜினை 1885ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ருடால்ஃப் டீசல் 1898ஆம் ஆண்டு டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்தார். ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் இணைந்து 1903ஆம் ஆண்டு ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தனர்.

1896ஆம் ஆண்டு அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான். அக்காலகட்டத்தில், குதிரையில்லாமல் ஓடும் வாகனத்தை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் பார்த்தார்கள். அது மனித சமுதாயத்தில் பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மிகக் குறுகிய காலத்தில் பலரும் அந்த இயந்திரத்தை செம்மைப்படுத்தி வெகு உபயோகமான சாதனமாக உருவாக்கி-விட்டார்கள்.

அந்த இயந்திரத்தைக் கொண்ட வாகனங்கள் இன்று மனித சமுதாயத்திற்கு மிக அவசியமான சாதனமாக மாறிவிட்டன. இவ்வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை என்னவென்றால் ஆய்வில் எந்த ஆய்வு பயனுள்ளவை, எவை பயனற்றவை என்று பிரித்துணர்வது கடினமான செயல் என்பதாகும். இது மற்றொரு உண்மையையும் உணர்த்துகிறது. இயற்கையின் ரகசியங்களை அறிவதும், புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து பிரச்சினை-களுக்குத் தீர்வு காண்பதும் ஓர் இனிய, மகிழ்ச்சியான அனுபவமாகும்.

புதியன சிந்தித்து, புதிய இயந்திரங்களைப் படைத்தவர்கள், அவை ஏற்படுத்தும் அரிய பலன்களைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். ஆகவே, படைப்புச் செயல்களில் ஈடுபாடோடு செயல்படுவது நிரந்தர மகிழ்ச்சியை அடைவதற்கான சரியான கருவியாகும்.

எதிலும் மெய்ம்மை காண்பதும், அதைக் கொண்டு புதியன படைப்பதும் மிகவும் மேன்மையான செயல்களாகும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏதாவதொரு வேலை செய்ய நேரிட்டாலும், படைப்புச் செயல்பாட்டை ஓய்வு நேரப்பணியாக செய்யலாம். ஓய்வு நேரப் பணியாகச் செய்ததன் மூலமாகத்தான் மனித சமுதாயத்தில், உலகில் மிகச் சிறந்த படைப்புகள் படைக்கப்பட்டிருக்-கின்றன. மிகச் சிறந்த மெய்ம்மைகள் உணரப்பட்டிருக்கின்றன.

தொழில் வளர்ச்சிகளுக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் முன்னேற்ற-மடைந்த உலகில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாதென்ற தாழ்வு மனப்-பான்மையுடன் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். மனிதன் மனிதநேயத்துடனும் விரிந்த பார்வையோடும், துணிவோடும் சிந்தித்தால் எவரும் சாதனை புரிய முடியும். ஆய்வுக்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலக நடப்புகளைக் கவனிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளைக் கருத்துடன் கவனிக்க வேண்டும்.

விஞ்ஞான, தத்துவ, அரசியல் களங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கருத்தாடல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கும்போது ஆய்வுக்கான பொருளைத் தேர்வு செய்ய முடியும். நிரந்தர மகிழ்ச்சியைப் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்பது பலருடைய நினைப்பாகும். அவ்வுணர்வுடன் பலர் பணம் சேர்ப்பதையே வாழ்வின் இலக்காகக் கொள்கின்றனர். அவர்களுடைய பணவெறியும், பேராசையும் தவறான இலக்குக்கு இட்டுச் செல்கின்றன.

நற்பண்புகளும், மகிழ்ச்சியும் ஒன்றையொன்று நீக்கமற சார்ந்தவை. உயர்ந்த பண்புகள் நிறைவான மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. தரமான, நிறைவான மகிழ்ச்சி பெரும்பாலும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடிப்பதால் உண்டாகின்றன. ஆகவே, மகிழ்ச்சி அடைய நற்பண்புகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆகவே, சகமனிதர்களின் உரிமை-களைப் பாதுகாக்கும் விழுமியங்களை நேர்மையாகக் கடைபிடிப்பதே மனநிறைவான மகிழ்ச்சி பெற ஒருவன் செய்ய வேண்டிய காரியமாகும். சமுதாயத்தில் மகிழ்ச்சி நிலவ அன்பிற்கும், அறிவிற்கும் சம முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். இக்கருத்தைத் தத்துவமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் வலியுறுத்தி-யுள்ளார்.

நிறைவான, இனிய வாழ்வு என்பது மனித நேயத்தையும், அறிவையும் அடிப்-படையாகக் கொண்டது என்று கூறியுள்ளார். அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்காத மனிதநேயமும், அன்பிற்கு முக்கியத்துவம் அளிக்காத அறிவும் நல்வாழ்க்கையை அளிக்காது என்கிறார். அன்பும், அறிவும் வளர்ந்தோங்குவதற்கான செயல்பாடுகளைச் செய்யாமல், பெரும்-பான்மையான மக்கள் பல பயனற்ற செயல்களை மிகுந்த ஈடுபாடோடு செய்து கொண்டிருக்-கிறார்கள்.

பிரார்த்தனை செய்தல், மதச்சடங்கு-களைச் செய்தல், உடலை வருத்துதல் விழா நடத்துதல் போன்ற செயல்கள் யாவும் இதற்குள் அடங்கும். இச்செயல்கள் உள்ளக் கிளர்ச்சி-யூட்டி சிறிது நேரத்திற்கு இன்ப உணர்வை உண்டாக்குகின்றன.

மக்களை பக்தி என்ற போதைக்கு உட்படுத்தி, ஒரு போலியான கற்பனை உலகில் சிறிது நேரம் சஞ்சரிக்க வைக்கின்றன; மெய்சிலிர்க்க வைக்கின்றன. இவைகளால் மக்கள் எந்த நலனையும், நெடிய இன்பத்தையும் அடைய முடியாது. எனவே, நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிக்க இச்செயல்-களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

மனிதநேயத்தையும் அழகுணர்ச்சியையும் பிரதிபலிக்கும் ரசனை மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. எல்லையற்ற மகிழ்ச்சியை எவை உண்டாக்குகிறது என்றால் மனிதநேயம், அறிவு, நீதி, ஒழுக்கம் சம்பந்தமான விழுமி-யங்களை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகள்தாம். ஆகவே, அவ்விழுமியங்களை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். எல்லையற்ற, நெடிய மகிழ்ச்சியை அடைய இவைதான் சரியன வழிமுறைகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *