போதனை யாருக்கு

ஜனவரி 01-15

`உணவை வீணடிப்பது பாவம் என்று மதங்கள் போதிக்கிறது அவ்வாறு நிகழச் செய்யும் அனைத்தையும் தவிருங்கள்-இது அண்மையில் மத்திய நுகர்வோர் நலத்துறை வெளியிட்ட விளம்பரத்தின் வாசகம். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் துறை இப்படி மதங்களை முன்னிறுத்தி விளம்பரம் கொடுக்கலாமா?

இந்து மதக் கோவில்களில் கல்லால் ஆன கடவுள் சிலைகளின் மீது கொட்டி வீணாக்கப்படும் பால், இளநீர், பழங்கள், நெய், எண்ணெய், தயிர், மஞ்சள், நவதானியங்கள் போன்றவை உணவுப் பொருட்கள் இல்லையா? கடவுளுக்காக சாலைகளில் உடைக்கப்படும் தேங்காய்;  திருஷ்டி கழிக்க உடைக்கப்படும் பூசணிக்காய், எரிக்கப்படும் மிளகாய், உப்பு ஆகியவையெல்லாம் என்ன?
மதங்களின் பெயரால் இந்தியாவில் உணவை வீணடித்து உற்பத்தி நாசம் செய்யும் நாடு உலகில் வேறெதுவும் உண்டா? மக்களுக்கு சிக்கனத்தைப் பற்றிப் போதிக்கும் அரசின் உணவுத்துறை முதலில் இந்து மத நிறுனங்களுக்கும், இந்து மதாபிமானிகளுக்கும் உணவை வீணடிக்காதீர்கள் எனப் போதிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *