“சாகும்போது வலி இருக்குமா?” திடீரென கலையரசனைப் பார்த்துக் கேட்டார் மாயவேல்.
“என்ன உனக்கு திடீர் சந்தேகம்? வலிக்குமா வலிக்காதான்னு செத்தவங்களைப் போய் கேட்கவா முடியும்?” என்று பதில் சொன்னார் கலையரசன்.
“சும்மா கிண்டல் பண்ணாதே கலையரசா. எனக்கு அறுபது வயசு ஆரம்பிச்சுடுச்சி. என்னைவிட சின்னவங்கயெல்லாம் திடீர் திடீர்னு செத்துப் போறாங்க. எனக்குப் பயமாயிருக்கு.”
“மாயவேல், டெத்பெயின் அதாவது மரணவலின்னு ஒண்ணு இருக்கு. சாகும்போது எல்லோருமே அதை அனுபவிச்சுத்தான் ஆகணும்.”
“அய்யய்யோ…! அப்படின்னா நான் என்ன செய்யட்டும்? எப்படி வலியைத் தாங்கிக் கொள்வது? எனக்குப் பயமாயிருக்கே!”
“சாவைக் கண்டு ஏன் இப்படி பயப்படுறே மாயவேல்? ஒரு நாள் எல்லோரும் சாகத்தானே போகிறோம்!”
“ஆனாலும் எனக்குப் பயமாவே இருக்கு. எப்பப் பார்த்தாலும் நெஞ்சு படக்படக்குன்னு அடிச்சிகிட்டே இருக்கு.”
“மாயவேல், நெஞ்சு படக்படக்கென்னு அடிக்காம இருந்தால்தான் கவலைப்படணும். நம்ம இதயம் எப்போதும் ‘லப்டப்’, ‘லப்டப்’ அப்படின்னு அடிச்சிகிட்டேதான் இருக்கும். இதயத்துடிப்பைப் பார்த்தே பயப்படுகிறாயா?
“நீ எப்பவும் கிண்டலாத்தான் பேசுவ கலையரசா. என் பயம் எனக்குத் தானே தெரியும்.”
“ஒரு குரங்கு பக்தன் சாவைக் கண்டு பயப்படலாமா?” இவ்வாறு கலையரசன் கேட்டவுடன் மாயவேலுக்குக் கோபம் வந்துவிட்டது.
“குரங்கு என்று சொல்லாதே. அனுமன் பக்தன்னு சொல்லு. அதனால்தான் நான் கல்யாணமே பண்ணிக்கல. பிரமச்சாரிய வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எனக்குக்கூட சாகும்போது வலி இருக்குமா?”
”எல்லோரும் மரண வலியை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். குரங்குப் பக்தியெல்லாம் எடுபடாது.”
“மரணங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கும் போலிருக்கே.”
ஆமாம் மாயவேல். மரணத்திலேயே நிறைய வகைகள் இருக்கு. சொல்கிறேன் கேள். வயது மூப்பின் அடிப்படையில் மரணமடைவது இயற்கை மரணம். வாகனங்களில் செல்லும் போதோ அல்லது வேறு வகையிலோ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அது அகால மரணம்.”
“அய்யய்யோ! கேட்டாலே பயமா இருக்கே! இன்னும் ஏதாவது இருக்கா கலையரசா?”
“ம்… இருக்கு. நாட்டுக்காகச் சண்டையிட்டு மடிந்தாலோ அல்லது யாரையாவது காப்பாற்ற முற்பட்டு செத்தாலோ அது வீர மரணம் எனப்படும். உதாரணமாக இராணுவ வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் போன்றவர்களைச் சொல்லலாம். மற்றவர்களால் சாகடிக்கப்படுவது கொலை. கொலையால் மரணம் சம்பவிக்கும். மரண தண்டனையாலோ, தன்னைத்தானே கொன்று கொள்வது மூலமாகவோ இயற்கைச் சீற்றங்களாலோ மரணம் ஏற்படும். தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது தற்கொலையாகும்.
“நீ ரொம்பவும் பயமுறுத்துகிறாயே… சரி, செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போவது எப்படி?”
“மாயவேல், நான் சொல்வதை நன்றாகக் கேள். மரணத்திற்குப் பிறகு சொர்க்கமோ, நரகமோ எதுவும் கிடையாது. இறுதியான நிகழ்வு மரணம்தான். இதை தந்தை பெரியார் மட்டும் சொன்னதாக நினைக்காதே. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலரும் சொல்லி இருக்காங்க.”
“நாம் செத்த பிறகு நம் ஆத்மா வேறு உடலுக்குச் செல்லாதா? இல்லாட்டி எங்குதான் போகுமாம்?
“ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம், மறுபிறப்பு, இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன், ”இது பெரியாரின் பொன்மொழி. இதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள். நான் வர்ரேன்.”
இவ்வாறு சொல்லிவிட்டு நண்பர் மாயவேலிடம் விடை பெற்றுச் சென்றார் கலையரசன்.
சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் மாயவேல் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வீதியின் ஒரு மூலையில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மரண அறிவிப்பு பேனர். அதைப் படித்துப் பார்த்தார் மாயவேல். இறந்துபோன ஒருவரின் பிறந்த, இறந்த தேதிகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேதிகளைத் தனது பிறந்த நாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார் மாயவேல். தன்னைவிட அவர் வயதில் மிகவும் குறைந்தவர் என்பதை அறிந்தார். அவரைவிட தான் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ந்தார். அப்போது மற்றொரு செய்தியையும் அதில் படித்தார். அதாவது இறந்துபோனவரின் கண்கள் ஒரு கண் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்துப் பார்த்து மிகவும் பயந்தார் மாயவேல்.
கண்களைக் கொடையாகக் கொடுத்துவிட்டால் சொர்க்கத்திற்குச் சென்றபின் கண் தெரியாமல் போய்விடுமோ என எண்ணினார்.
சிறிது தூரம் நடந்து சென்றபின் அவர் மற்றொரு பெரிய பேனரையும் பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு இரங்கல் பேனர்தான். மீண்டும் இறந்து போனவரின் பிறப்பு, இறப்பு தேதிகளைத் தன்னுடைய வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர் தன்னைவிட அய்ந்து வயது மூத்தவர் என்பதை அறிந்தார். தானும் இன்னும் அய்ந்து வருடத்தில் இறந்துவிடுவோமோ என அஞ்சினார்.
அதைவிட அவருக்கு அதிர்ச்சியான செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது. இறந்துபோனவரின் உடல் கொடையாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது என்ன அநியாயம்! இறந்துபோனவர் நல்ல கதிக்குப் போவாரா? மருத்துவக் கல்லூரிக்கு உடலைக் கொடுத்தால் சடங்குகளையெல்லாம் எப்படி செய்வது? கண்டிப்பாக அவர் சொர்க்கத்திற்குப் போக மாட்டார்”, என அவர் வாய் முணுமுணுத்தது.
இவ்வாறு எண்ணிக்கொண்டே சாலையைக் கவனிக்காமல் சென்ற அவர்மீது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மோதிவிட்டார். நிலைகுலைந்த மாயவேல் கீழே சாய்ந்தபோது தற்செயலாக அங்கு வந்த அவரது நண்பர் கலையரசன் தாங்கிப் பிடித்தார். இதனால் பெரிய விபத்திலிருந்து அவர் தப்பினார்.
“அனுமான் தான் என்னைக் காப்பாற்றினார்”, என்றார் மாயவேல்.
“அனுமான் காப்பத்தல மாயவேல். நான்தான் காப்பாத்தினேன். விட்டிருந்தால் கீழே விழுந்து பலத்த அடிபட்டிருப்பாய். விபத்தில் செத்துப் போனால் அது அகால மரணமாகிவிடும்.”
“ஏனப்பா இப்படி பயம் காட்டித் தொலைக்கிறாய். நானே அரண்டு போய் இருக்கேன்.”
“ஏன் அரண்டுபோய் இருக்கியாம் மாயவேல்?”
“கண்களைத் தானம் செய்தாலும் பரவாயில்லை; ஆனால், உடம்பையே தானம் செய்யறாங்களே! இது சரிதானா?”
“செத்த பிறகு கண்களைக் கொடையாகக் கொடுத்தால் நமது கண்களைக் கொண்டு யாரோ சிலர் உலகத்தைப் பார்ப்பாங்க. உடலையே கொடையாகக் கொடுத்தால் அது மருத்துவம் படிக்கும் பிள்ளைகளுக்குப் பயன்படும். இதுல என்ன தப்பைக் கண்டுபிடிச்சிட்டீங்களாம்? அது மட்டுமல்ல மாயவேல்! இப்போ மூளைச் சாவு அடைஞ்சவங்க உடல் உறுப்புகளும் கொடையாகப் பெறப்படுகிறது.”
“அதென்ன மூளைச் சாவு? கேட்டாலே குலை நடுக்கமா இருக்குதே.”
“மாயவேல், விபத்தில் அல்லது நோயில் சிக்கிய ஒருவர் முழுமையான கோமா நிலைக்குச் சென்றாலோ, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் செய்தாலோ, சுயநினைவுக்குத் திரும்பவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, மூளைக்கு அறவே இரத்தம் செல்லாமல் போனாலோ அந்த நிலையைத்தான் மூளைச் சாவு என்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மரணத்தின் வகைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா! அதில் மூளைச் சாவும் ஒன்று. இந்தச் சாவில் மூளை தனது சுயநினைவையும், செயலையும் முற்றிலும் இழந்துவிடுகிறது.”
மாயவேல் மேலும் சில சந்தேகங்களைக் கேட்டார்.
“மூளைச்சாவு அடைஞ்சா உடல் உறுப்புகளைத் தானம் செய்யலாம் என்கிறாயே, அது எப்படி?”
“மூளைச் சாவு அடைந்தவர்களைச் செயற்கை இயந்திரங்களின் உதவியால் இதயத்தைத் துடிக்க வைக்க முடியும். ஆனால், அதை நீடிக்க முடியாது. அவர் இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளைக் கொடையாக அளிக்க முடியும்.”
“இருந்தாலும் துடிக்கும் இதயத்தை எடுப்பது தப்புதானே கலையரசா?”
மீண்டும் சந்தேகம் கேட்டார் மாயவேல்.
“நான் ஏற்கனவே சொன்னதுபோல் மூளைச் சாவு என்றாலே அது சட்டப்படியான மரணம்தான். மூளைச் சாவு அடைந்தவர்கள் மீண்டு வர முடியாது. சுயநினைவுக்கு வரமுடியாது, அது இறுதியானது. அதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொடையாக உறவினர்களின் அனுமதியுடன் பெறுவது சட்டரீதியானது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளைக் கொடையாக அளிப்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இறுதி மரியாதை செலுத்துவார். உடல் அடக்கமும் அரசு மரியாதையுடன் செய்யப்படும்.”
“செத்தபின் எது செய்தால் என்ன கலையரசா?”
“செத்த பிறகு நம்மால் ஒருவர் உயிர் வாழ்கிறார் என்ற எண்ணம் வரவேண்டும். மண்ணுக்குப் போவது மனிதர்க்குக் கிடைக்கட்டுமே! எல்லாவிதமான பற்றையும்விட மானிடப் பற்றே சிறந்தது. கண்கொடை, உடற்கொடை அளிப்பவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவாளர்களாகவே இருந்திருப்பார்கள். அவர்கள் குடும்பத்தினரும் அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றுவார்கள். அது சரி மாயவேல், மரணத்திற்கு இப்படி பயப்படுறீயே! நீ செத்துப்போனா எத்தனை பேர் கண்ணீர் விடுவாங்க?”
கலையரசன் இப்படிக் கேட்டவுடன் சற்றே திகைத்துப் போனார் மாயவேல். உண்மையில் அவருக்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நினைத்துப் பார்த்தார். தனது ஒரே ஒரு சகோதரியைத் தவிர அவர் எந்த உறவினர்களிடமும் தொடர்பில் இல்லை. கலையரசனைத் தவிர வேறு நண்பர்கள் யாரும் அவருக்கு இல்லை. வெட்டிப் பேச்சு பேசி சோம்பேறிகளாக கோயிலில் உட்கார்ந்து கிடக்கும் சில நபர்களை மட்டுமே அவருக்குத் தெரியும்.
“என்ன யோசனை செய்கிறாய் மாயவேல். நீ மரணம் எய்தினால் அழப்போவது உன் சகோதரி மட்டுமே. நான் வேண்டுமானால் ஒரு சொட்டு கண்ணீர் விடுவேன். அவ்வளவுதான் இந்த நிலைமைக்கெல்லாம் நீதான் காரணம்.”
“நானா? எப்படி?” என்று கேட்ட மாயவேலுக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டார் கலையரசன்.
“மாயவேல், நீ ஒரு பட்டதாரிதானே?”
“ஆமாம். பி.எஸ்சி இயற்பியல் படிச்சிருக்கேன்” என்று பதில் சொன்னார் மாயவேல்.
“அது மட்டுமல்லாமல் பி.எட்., படிப்பும் படிச்சிருக்கியே. அதை ஏன் சொல்லவில்லை? ஆசிரியர் வேலைக்கு முழுத் தகுதி பெற்றவன் நீ. ஆனால், நீ வேலைக்கே செல்லவில்லை”
“வேலை கிடைத்தால்தானே! கிடைக்கலையே”
“எனக்கு நன்றாகத் தெரியும் மாயவேல். நீ வேலைக்காக கொஞ்சம்கூட முயற்சி பண்ணல. பத்து பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தாவது அவர்கள் வாழ்க்கையை வளமாக்கியிருக்கலாம். ஆனால் நீ எதையும் செய்யாமல் கோயிலே கதியென்று கிடந்தாய். உன் உறவினர்களும் உன்னைவிட்டு விலகிவிட்டார்கள். கோயில் குளங்களையே சுற்றி வரும் சோம்பேறி நண்பர்களைத் தவிர உனக்கு யாருமே இல்லை. அவர்களும் உனக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். குரங்கு பொம்மையைக் கும்பிட்டுக் கொண்டு கல்யாணமும் செஞ்சிக்காமல் உன் வாழ்நாளையே வீணாக்கிவிட்டாய். உன்னால் உனக்கும் பயனில்லை; இந்தச் சமூகத்திற்கும் பயனில்லை. நீ ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறாய்? உன் வாழ்வே வேஸ்ட்”, என்று சற்றுக் கடுமையாகவே பேசினார் கலையரசன்.
அவர் சொன்னதைக் கேட்டு சற்றே அதிர்ந்துபோனார் மாயவேல்.
“என்ன இப்படி சொல்லிட்டே கலையரசா! என் வாழ்வே வீணான வாழ்வா?” என்றார்.
“ஆமாம் மாயவேல். கோயிலுக்குப் போவது,
குரங்குப் பொம்மையைக் கும்பிடுவது, சகோதரிகிட்ட
பணம் வாங்கிச் செலவு செய்து உடம்பை வளர்த்துக்கிட்டு வர்றது, இதைத்தான் உன் வாழ்க்கையாக அமைச்சிகிட்டு யாருக்கும் பயனில்லாம வாழ்ந்துக்கிட்டு வர்றே. குரங்கு, கோயிலால் நீ என்ன பயனைக் கண்டாய்? யாருக்காக நீ ரொம்ப வருஷம் வாழ விரும்புறே,” என்று மீண்டும் கடுமையாகப் பேசினார் கலையரசன்.
அவர் பேசியதைக் கேட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டார் மாயவேல்.
“இனிமேல் நான் என்ன செய்வது? வயதாகி விட்டதே” என்றார்.
“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நாம் வசிப்பது தமிழ்நாடு. தன்னுடைய தொண்ணூற்று அய்ந்தாவது வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்து
கொண்டு ஊர் ஊராகச் சென்று சமூகநீதியையும், சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பரப்பிய அய்யா வாழ்ந்த நாடு. இப்போதும் அய்யா செய்த பணிகளைத் தொய்வில்லாமல் தன்னுடைய தொண்ணூற்று ஒன்றாம் வயதிலும் ஊர் ஊராகச் சென்று ஓர் இளைஞரைப் போல் பணி செய்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழும் நாடு.
மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் செயல்பாடுகளை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். என்னைப் போன்றோர் இளைஞர்களாக இருந்த காலத்திலேயே கைகோத்து நின்று வருகிறோம். நீயும் கோயில், குளம், குரங்கு
இவைகளைச் சுற்றுவதை விட்டுவிட்டு பகுத்தறிவாளர்களோடு கைகோத்து நில். எஞ்சிய வாழ்நாளைப் பயனுள்ள வகையில் செலவிடு. பகுத்தறிவு. சமூகநீதி
இவற்றை வளர்க்கவும், மதவெறி, ஜாதிவெறியை மாய்க்கவும் எங்களோடு கை கோத்து வா! மரணத்தைக் கண்டு பயப்படாதே! நாம் மறைந்தாலும் நம் கொள்கைகள் நாட்டில் நிலைத்து நிற்கும். நம் தலைவர்களின் கொள்கைப் படையில் தளபதியாகி, பிற்காலத்
தலைமுறையைப் பகுத்தறிவுப் பாதையில் செலுத்து
வோம். என்ன சொல்கிறாய் மாயவேல்” என்று
கலையரசன் சொல்லி முடித்த அடுத்த நொடியில் அவருடைய கைகளில் தன் கைகளை இணைத்துக் கொண்டார் மாயவேல்.
“சாகும்போது வலி இருக்குமா?” திடீரென கலையரசனைப் பார்த்துக் கேட்டார் மாயவேல்.
“என்ன உனக்கு திடீர் சந்தேகம்? வலிக்குமா வலிக்காதான்னு செத்தவங்களைப் போய் கேட்கவா முடியும்?” என்று பதில் சொன்னார் கலையரசன்.
“சும்மா கிண்டல் பண்ணாதே கலையரசா. எனக்கு அறுபது வயசு ஆரம்பிச்சுடுச்சி. என்னைவிட சின்னவங்கயெல்லாம் திடீர் திடீர்னு செத்துப் போறாங்க. எனக்குப் பயமாயிருக்கு.”
“மாயவேல், டெத்பெயின் அதாவது மரணவலின்னு ஒண்ணு இருக்கு. சாகும்போது எல்லோருமே அதை அனுபவிச்சுத்தான் ஆகணும்.”
“அய்யய்யோ…! அப்படின்னா நான் என்ன செய்யட்டும்? எப்படி வலியைத் தாங்கிக் கொள்வது? எனக்குப் பயமாயிருக்கே!”
“சாவைக் கண்டு ஏன் இப்படி பயப்படுறே மாயவேல்? ஒரு நாள் எல்லோரும் சாகத்தானே போகிறோம்!”
“ஆனாலும் எனக்குப் பயமாவே இருக்கு. எப்பப் பார்த்தாலும் நெஞ்சு படக்படக்குன்னு அடிச்சிகிட்டே இருக்கு.”
“மாயவேல், நெஞ்சு படக்படக்கென்னு அடிக்காம இருந்தால்தான் கவலைப்படணும். நம்ம இதயம் எப்போதும் ‘லப்டப்’, ‘லப்டப்’ அப்படின்னு அடிச்சிகிட்டேதான் இருக்கும். இதயத்துடிப்பைப் பார்த்தே பயப்படுகிறாயா?
“நீ எப்பவும் கிண்டலாத்தான் பேசுவ கலையரசா. என் பயம் எனக்குத் தானே தெரியும்.”
“ஒரு குரங்கு பக்தன் சாவைக் கண்டு பயப்படலாமா?” இவ்வாறு கலையரசன் கேட்டவுடன் மாயவேலுக்குக் கோபம் வந்துவிட்டது.
“குரங்கு என்று சொல்லாதே. அனுமன் பக்தன்னு சொல்லு. அதனால்தான் நான் கல்யாணமே பண்ணிக்கல. பிரமச்சாரிய வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எனக்குக்கூட சாகும்போது வலி இருக்குமா?”
”எல்லோரும் மரண வலியை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். குரங்குப் பக்தியெல்லாம் எடுபடாது.”
“மரணங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கும் போலிருக்கே.”
ஆமாம் மாயவேல். மரணத்திலேயே நிறைய வகைகள் இருக்கு. சொல்கிறேன் கேள். வயது மூப்பின் அடிப்படையில் மரணமடைவது இயற்கை மரணம். வாகனங்களில் செல்லும் போதோ அல்லது வேறு வகையிலோ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அது அகால மரணம்.”
“அய்யய்யோ! கேட்டாலே பயமா இருக்கே! இன்னும் ஏதாவது இருக்கா கலையரசா?”
“ம்… இருக்கு. நாட்டுக்காகச் சண்டையிட்டு மடிந்தாலோ அல்லது யாரையாவது காப்பாற்ற முற்பட்டு செத்தாலோ அது வீர மரணம் எனப்படும். உதாரணமாக இராணுவ வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் போன்றவர்களைச் சொல்லலாம். மற்றவர்களால் சாகடிக்கப்படுவது கொலை. கொலையால் மரணம் சம்பவிக்கும். மரண தண்டனையாலோ, தன்னைத்தானே கொன்று கொள்வது மூலமாகவோ இயற்கைச் சீற்றங்களாலோ மரணம் ஏற்படும். தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது தற்கொலையாகும்.
“நீ ரொம்பவும் பயமுறுத்துகிறாயே… சரி, செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போவது எப்படி?”
“மாயவேல், நான் சொல்வதை நன்றாகக் கேள். மரணத்திற்குப் பிறகு சொர்க்கமோ, நரகமோ எதுவும் கிடையாது. இறுதியான நிகழ்வு மரணம்தான். இதை தந்தை பெரியார் மட்டும் சொன்னதாக நினைக்காதே. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலரும் சொல்லி இருக்காங்க.”
“நாம் செத்த பிறகு நம் ஆத்மா வேறு உடலுக்குச் செல்லாதா? இல்லாட்டி எங்குதான் போகுமாம்?
“ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம், மறுபிறப்பு, இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன், ”இது பெரியாரின் பொன்மொழி. இதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள். நான் வர்ரேன்.”
இவ்வாறு சொல்லிவிட்டு நண்பர் மாயவேலிடம் விடை பெற்றுச் சென்றார் கலையரசன்.
சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் மாயவேல் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வீதியின் ஒரு மூலையில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மரண அறிவிப்பு பேனர். அதைப் படித்துப் பார்த்தார் மாயவேல். இறந்துபோன ஒருவரின் பிறந்த, இறந்த தேதிகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேதிகளைத் தனது பிறந்த நாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார் மாயவேல். தன்னைவிட அவர் வயதில் மிகவும் குறைந்தவர் என்பதை அறிந்தார். அவரைவிட தான் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ந்தார். அப்போது மற்றொரு செய்தியையும் அதில் படித்தார். அதாவது இறந்துபோனவரின் கண்கள் ஒரு கண் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்துப் பார்த்து மிகவும் பயந்தார் மாயவேல்.
கண்களைக் கொடையாகக் கொடுத்துவிட்டால் சொர்க்கத்திற்குச் சென்றபின் கண் தெரியாமல் போய்விடுமோ என எண்ணினார்.
சிறிது தூரம் நடந்து சென்றபின் அவர் மற்றொரு பெரிய பேனரையும் பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு இரங்கல் பேனர்தான். மீண்டும் இறந்து போனவரின் பிறப்பு, இறப்பு தேதிகளைத் தன்னுடைய வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர் தன்னைவிட அய்ந்து வயது மூத்தவர் என்பதை அறிந்தார். தானும் இன்னும் அய்ந்து வருடத்தில் இறந்துவிடுவோமோ என அஞ்சினார்.
அதைவிட அவருக்கு அதிர்ச்சியான செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது. இறந்துபோனவரின் உடல் கொடையாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது என்ன அநியாயம்! இறந்துபோனவர் நல்ல கதிக்குப் போவாரா? மருத்துவக் கல்லூரிக்கு உடலைக் கொடுத்தால் சடங்குகளையெல்லாம் எப்படி செய்வது? கண்டிப்பாக அவர் சொர்க்கத்திற்குப் போக மாட்டார்”, என அவர் வாய் முணுமுணுத்தது.
இவ்வாறு எண்ணிக்கொண்டே சாலையைக் கவனிக்காமல் சென்ற அவர்மீது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மோதிவிட்டார். நிலைகுலைந்த மாயவேல் கீழே சாய்ந்தபோது தற்செயலாக அங்கு வந்த அவரது நண்பர் கலையரசன் தாங்கிப் பிடித்தார். இதனால் பெரிய விபத்திலிருந்து அவர் தப்பினார்.
“அனுமான் தான் என்னைக் காப்பாற்றினார்”, என்றார் மாயவேல்.
“அனுமான் காப்பத்தல மாயவேல். நான்தான் காப்பாத்தினேன். விட்டிருந்தால் கீழே விழுந்து பலத்த அடிபட்டிருப்பாய். விபத்தில் செத்துப் போனால் அது அகால மரணமாகிவிடும்.”
“ஏனப்பா இப்படி பயம் காட்டித் தொலைக்கிறாய். நானே அரண்டு போய் இருக்கேன்.”
“ஏன் அரண்டுபோய் இருக்கியாம் மாயவேல்?”
“கண்களைத் தானம் செய்தாலும் பரவாயில்லை; ஆனால், உடம்பையே தானம் செய்யறாங்களே! இது சரிதானா?”
“செத்த பிறகு கண்களைக் கொடையாகக் கொடுத்தால் நமது கண்களைக் கொண்டு யாரோ சிலர் உலகத்தைப் பார்ப்பாங்க. உடலையே கொடையாகக் கொடுத்தால் அது மருத்துவம் படிக்கும் பிள்ளைகளுக்குப் பயன்படும். இதுல என்ன தப்பைக் கண்டுபிடிச்சிட்டீங்களாம்? அது மட்டுமல்ல மாயவேல்! இப்போ மூளைச் சாவு அடைஞ்சவங்க உடல் உறுப்புகளும் கொடையாகப் பெறப்படுகிறது.”
“அதென்ன மூளைச் சாவு? கேட்டாலே குலை நடுக்கமா இருக்குதே.”
“மாயவேல், விபத்தில் அல்லது நோயில் சிக்கிய ஒருவர் முழுமையான கோமா நிலைக்குச் சென்றாலோ, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் செய்தாலோ, சுயநினைவுக்குத் திரும்பவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, மூளைக்கு அறவே இரத்தம் செல்லாமல் போனாலோ அந்த நிலையைத்தான் மூளைச் சாவு என்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மரணத்தின் வகைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா! அதில் மூளைச் சாவும் ஒன்று. இந்தச் சாவில் மூளை தனது சுயநினைவையும், செயலையும் முற்றிலும் இழந்துவிடுகிறது.”
மாயவேல் மேலும் சில சந்தேகங்களைக் கேட்டார்.
“மூளைச்சாவு அடைஞ்சா உடல் உறுப்புகளைத் தானம் செய்யலாம் என்கிறாயே, அது எப்படி?”
“மூளைச் சாவு அடைந்தவர்களைச் செயற்கை இயந்திரங்களின் உதவியால் இதயத்தைத் துடிக்க வைக்க முடியும். ஆனால், அதை நீடிக்க முடியாது. அவர் இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளைக் கொடையாக அளிக்க முடியும்.”
“இருந்தாலும் துடிக்கும் இதயத்தை எடுப்பது தப்புதானே கலையரசா?”
மீண்டும் சந்தேகம் கேட்டார் மாயவேல்.
“நான் ஏற்கனவே சொன்னதுபோல் மூளைச் சாவு என்றாலே அது சட்டப்படியான மரணம்தான். மூளைச் சாவு அடைந்தவர்கள் மீண்டு வர முடியாது. சுயநினைவுக்கு வரமுடியாது, அது இறுதியானது. அதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொடையாக உறவினர்களின் அனுமதியுடன் பெறுவது சட்டரீதியானது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளைக் கொடையாக அளிப்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இறுதி மரியாதை செலுத்துவார். உடல் அடக்கமும் அரசு மரியாதையுடன் செய்யப்படும்.”
“செத்தபின் எது செய்தால் என்ன கலையரசா?”
“செத்த பிறகு நம்மால் ஒருவர் உயிர் வாழ்கிறார் என்ற எண்ணம் வரவேண்டும். மண்ணுக்குப் போவது மனிதர்க்குக் கிடைக்கட்டுமே! எல்லாவிதமான பற்றையும்விட மானிடப் பற்றே சிறந்தது. கண்கொடை, உடற்கொடை அளிப்பவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவாளர்களாகவே இருந்திருப்பார்கள். அவர்கள் குடும்பத்தினரும் அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றுவார்கள். அது சரி மாயவேல், மரணத்திற்கு இப்படி பயப்படுறீயே! நீ செத்துப்போனா எத்தனை பேர் கண்ணீர் விடுவாங்க?”
கலையரசன் இப்படிக் கேட்டவுடன் சற்றே திகைத்துப் போனார் மாயவேல். உண்மையில் அவருக்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நினைத்துப் பார்த்தார். தனது ஒரே ஒரு சகோதரியைத் தவிர அவர் எந்த உறவினர்களிடமும் தொடர்பில் இல்லை. கலையரசனைத் தவிர வேறு நண்பர்கள் யாரும் அவருக்கு இல்லை. வெட்டிப் பேச்சு பேசி சோம்பேறிகளாக கோயிலில் உட்கார்ந்து கிடக்கும் சில நபர்களை மட்டுமே அவருக்குத் தெரியும்.
“என்ன யோசனை செய்கிறாய் மாயவேல். நீ மரணம் எய்தினால் அழப்போவது உன் சகோதரி மட்டுமே. நான் வேண்டுமானால் ஒரு சொட்டு கண்ணீர் விடுவேன். அவ்வளவுதான் இந்த நிலைமைக்கெல்லாம் நீதான் காரணம்.”
“நானா? எப்படி?” என்று கேட்ட மாயவேலுக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டார் கலையரசன்.
“மாயவேல், நீ ஒரு பட்டதாரிதானே?”
“ஆமாம். பி.எஸ்சி இயற்பியல் படிச்சிருக்கேன்” என்று பதில் சொன்னார் மாயவேல்.
“அது மட்டுமல்லாமல் பி.எட்., படிப்பும் படிச்சிருக்கியே. அதை ஏன் சொல்லவில்லை? ஆசிரியர் வேலைக்கு முழுத் தகுதி பெற்றவன் நீ. ஆனால், நீ வேலைக்கே செல்லவில்லை”
*“வேலை கிடைத்தால்தானே! கிடைக்கலையே”
“எனக்கு நன்றாகத் தெரியும் மாயவேல். நீ வேலைக்காக கொஞ்சம்கூட முயற்சி பண்ணல. பத்து பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தாவது அவர்கள் வாழ்க்கையை வளமாக்கியிருக்கலாம். ஆனால் நீ எதையும் செய்யாமல் கோயிலே கதியென்று கிடந்தாய். உன் உறவினர்களும் உன்னைவிட்டு விலகிவிட்டார்கள். கோயில் குளங்களையே சுற்றி வரும் சோம்பேறி நண்பர்களைத் தவிர உனக்கு யாருமே இல்லை. அவர்களும் உனக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். குரங்கு பொம்மையைக் கும்பிட்டுக் கொண்டு கல்யாணமும் செஞ்சிக்காமல் உன் வாழ்நாளையே வீணாக்கிவிட்டாய். உன்னால் உனக்கும் பயனில்லை; இந்தச் சமூகத்திற்கும் பயனில்லை. நீ ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறாய்? உன் வாழ்வே வேஸ்ட்”, என்று சற்றுக் கடுமையாகவே பேசினார் கலையரசன்.
அவர் சொன்னதைக் கேட்டு சற்றே அதிர்ந்துபோனார் மாயவேல்.
“என்ன இப்படி சொல்லிட்டே கலையரசா! என் வாழ்வே வீணான வாழ்வா?” என்றார்.
“ஆமாம் மாயவேல். கோயிலுக்குப் போவது, குரங்குப் பொம்மையைக் கும்பிடுவது, சகோதரிகிட்ட பணம் வாங்கிச் செலவு செய்து உடம்பை வளர்த்துக் கிட்டு வர்றது, இதைத்தான் உன் வாழ்க்கையாக அமைச்சிகிட்டு யாருக்கும் பயனில்லாம வாழ்ந்துக்கிட்டு வர்றே. குரங்கு, கோயிலால் நீ என்ன பயனைக் கண்டாய்? யாருக்காக நீ ரொம்ப வருஷம் வாழ விரும்புறே,” என்று மீண்டும் கடுமையாகப் பேசினார் கலையரசன். அவர் பேசியதைக் கேட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டார் மாயவேல்.
“இனிமேல் நான் என்ன செய்வது? வயதாகி விட்டதே” என்றார்.“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நாம் வசிப்பது தமிழ்நாடு. தன்னுடைய தொண்ணூற்று அய்ந்தாவது வயதிலும் மூத்திரச்
சட்டியைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சென்று சமூகநீதியையும், சுயமரியாதையையும், பகுத்தறிவை
யும் பரப்பிய அய்யா வாழ்ந்த நாடு. இப்போதும் அய்யா செய்த பணிகளைத் தொய்வில்லாமல் தன்னுடைய தொண்ணூற்று ஒன்றாம் வயதிலும் ஊர் ஊராகச் சென்று ஓர் இளைஞரைப் போல் பணி செய்து
வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழும் நாடு.
மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் செயல்பாடுகளை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். என்னைப் போன்றோர் இளைஞர்களாக இருந்த காலத்திலேயே கைகோத்து நின்று வருகிறோம். நீயும் கோயில், குளம், குரங்கு இவைகளைச் சுற்றுவதை விட்டுவிட்டு பகுத்தறிவாளர்களோடு கைகோத்து நில். எஞ்சிய வாழ்நாளைப் பயனுள்ள வகையில் செலவிடு. பகுத்தறிவு. சமூகநீதி இவற்றை வளர்க்கவும், மதவெறி, ஜாதிவெறியை மாய்க்கவும் எங்களோடு கை கோத்து வா! மரணத்தைக்கண்டு பயப்படாதே! நாம் மறைந்தாலும் நம் கொள்கைகள் நாட்டில் நிலைத்து நிற்கும். நம் தலைவர்களின் கொள்கைப் படையில் தளபதியாகி, பிற்காலத் தலைமுறையைப் பகுத்தறிவுப் பாதையில் செலுத்து
வோம். என்ன சொல்கிறாய் மாயவேல்” என்று கலையரசன் சொல்லி முடித்த அடுத்த நொடியில் அவருடைய கைகளில் தன் கைகளை இணைத்துக் கொண்டார் மாயவேல்.